தினமணியில் ஒரு தவ்ளூண்டு கார்ட்டூன் வந்ததுக்கே கருணாநிதி குய்யோ முறையோன்னு அலறி, கூப்பாடு போட்டு, என் பொண்டாட்டி என்ன மலடியான்னு கேட்டு, சினிமாக்காரங்களுக்கும் எனக்கும் இருக்கற ஒறவ யாராலயும் பிரிக்க முடியாதுன்னு பொலம்பனாரு.
இந்தியா டுடே வார இதழில், தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களில் கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி வளைத்துக் கட்டி எழுதியும் கூட, இது வரை காதறுந்த ஊசியும் எழுதவில்லை. கருணாநிதியும் எழுதவில்லை.
இப்படி அமைதியாகவே இருந்தால் நமக்கெல்லாம் போர் அடிக்காதா ?
அதனால், இந்தியா டுடே வார இதழின் கட்டுரைகளுக்கு, கருணாநிதியின் சார்பாக சவுக்கே மறுப்பு எழுதுகிறது.
உடன்பிறப்பே,
முதலைக் கூட்டம் போல வளர்ந்துள்ள எனது குடும்பத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரம் கிடைக்காமல் திண்டாடும் ஒரு சூழலில், மனம் வெதும்பி ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுக்க ஒதுங்கும் சூழலில், இப்படி ஒரு கடிதத்தை உனக்கு எழுதுவதற்கு காரணம் என்னவென்று நீ அறிய மாட்டாய் நான் அறிவேன்.
குறுக்கே நூல் அணிந்த ஒரு குறுக்குப் புத்திக் காரர்களின் கூட்டம், குடும்பத்திற்கு, கழக குடும்பத்திற்கு எதிராக கிளம்பியிருப்பதை நீ அறிந்திருப்பாயா இல்லையா என்பதை நான் அறியேன்.
அந்தக் குறுநரிக் கூட்டம் என்னவெல்லாம் எழுதி விட்டது. கு’பேர’ குடும்பமாம். என்ன ஒரு ஆணவம் ? ஒரு குசேலக் குடும்பத்தை குபேரக் குடும்பம் என்று சொல்ல என்ன துணிச்சல் ?
‘அண்ணாசாலை ஆரியக் கூட்டத்தின்‘ கொட்டத்தை சாந்துப் பொட்டை வைத்து அடக்கிய ஒரு சில நாட்களுக்குள் ‘ராதாகிருஷ்ணன் சாலை ராட்சசர்கள்‘ புதிதாக கிளம்பியிருக்கிறார்கள்.
திருக்குவளையிலிருந்து, திருட்டு ரயிலேறி, தகரப் பெட்டியோடு சென்னை வந்து, தீயசக்தியாக உருமாறி, ஏழை உழைப்பாளி மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் என்னையா குபேரக் குடும்பம் என்கிறார்கள் ?
பெயரிலே ஆங்கிலம். உணர்விலே பார்ப்பனீயம். உள்ளத்திலே நஞ்சு. இதுதான் இந்தியா டுடே.
இந்தியா டுடே இதழை விட பாரம்பரியம் மிக்க பத்திரிக்கை அதிபர்களான கோயங்கா குடும்பத்தினர், இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களை தமிழக அரசின் செய்தி ஏடுகளாக மாற்றி விட்டு, பல அடுக்கு மாடி கட்டிடங்களை கட்டி சத்தமில்லாமல் வேறு தொழிலுக்கு போக வில்லையா ?
மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு என்று என்னால் அன்போடு அழைக்கப் பட்ட இந்து நாளேடு, இன்று கருணாநிதியின் சொம்பு நாளேடாக மாறவில்லையா ?
ஒரே ஒரு விசாரணை கமிஷன் போட்டு, டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டையும், பகவான் சிங்கையும், மண்டியிட வைக்க வில்லையா ?
அரசு விளம்பரங்களை அள்ளிக் கொடுத்து, டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழை கோபாலபுரம் டைம்ஸாக மாற்றவில்லையா ?
இன்று தமிழ்நாட்டில் எந்தப் பத்திரிக்கையாவது உண்மையை எழுத என்னை மீறி முடியமா ? அப்படி மீறி எழுதினால் கழக உடன்பிறப்பான நீ பொறுமை காப்பாயா ? ராதாகிருஷ்ணன் சாலையில், புறநானூற்றுப் புலிப்படை அணி வகுத்தால் என்ன ஆகும் ? ஆனால், அறிஞர் அண்ணா எனக்கு அறவழியைத் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
தமிழுக்காகவும், திராவிட இனத்துக்காகவும் பாடுபட்டதைத் தவிர, என்ன குற்றத்தை செய்து விட்டான் இந்தக் கருணநிதி ? இந்தக் கருணாநிதி மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றுதானே, இவ்வாறு பொய்யையும், புரட்டையும், புனைசுருட்டையும், உண்மை என்று சில ஏடுகளிலே எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ?
குபேரக் குடும்பம் என்று எழுதுகிறார்களே …… நாங்கள் மட்டுமா குபேரக் குடும்பம். வட இந்தியாவிலே, திருபாய் அம்பானி என்ற ஒருவர் இருந்தார். என்னைப் போலவே, பிற்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒரு சாதாரண பெட்ரோல் பங்க்கிலே வேலை பார்த்து, இன்று இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியுள்ளாரே …. அந்தக் குடும்பம் குபேரக் குடும்பமாக தெரியவில்லையா ?
அவர் மறைவுக்குப் பின், அவரது இரு மகன்களும் சண்டையிட்டுக் கொண்டு, அந்த நிறுவனத்தை இரண்டாகப் பிரித்து இன்று அவர்கள் இருவரும் தங்களுக்கென்று தனித் தனி சாம்ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள வில்லையா ?
அது போலத்தானே நமது கழகமும் ? திருபாய் அம்பானிக்கு ஒரு மனைவி இரு மகன்கள், ஒரு மகள். எனக்கு மூன்று மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களின் கணக்கு சட்டென நினைவுக்கு வரவில்லை. அதனால், மூன்று பேருக்காக ஒரு லட்சம் கோடிகளை சேர்க்கும் போது, ஒரு முன்னூறு பேருக்காக ஒரு மூன்று லட்சம் கோடிகளை சேர்த்தால் அது பொறுக்கவில்லையே இந்த விபீடணர் கூட்டத்திற்கு.
வட இந்தியாவிலே ஜம்ஷெட்ஜி டாடா என்று ஒருவர் இருந்தார். அவர் மும்பாயிலே காட்டன் மில்லைத் தொடங்கினார். அவருக்குப் பின் வந்த அவர் வாரிசுகளெல்லாம், வரிசையாக தொழிலை விரிவு படுத்தி, இன்று டாடா குழுமம் என்ற மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்கள் குபேரக் குடும்பமா, அல்லது நான் குபேரக் குடும்பமா ?
இந்தியாவிலே முதன் முறையாக ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ஊழல், தியாகத் திருவிளக்கின் கணவர் அருமை நண்பர் ராஜீவ் செயல்படுத்திய போபர்ஸ் ஊழல். அந்த ஊழலின் மொத்த மதிப்பே 66 கோடி ரூபாய்தான்.
ஆனால், இந்தியாவே வியக்கும் அளவுக்கு, வாயில் விரல் வைக்கும் அளவுக்கு, எண்ணி மகிழும் அளவுக்கு, பூரிப்பால் இதயம் விம்மும் அளவுக்கு, தமிழ் கூறு நல்லுலகு பெருமை கொள்ளும் அளவுக்கு, ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழலை புரிந்திருப்பது ஒரு பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழன் என்பதால்தானே இந்த பொச்சரிப்பு ? வக்கரிப்பு ? மனக்கரிப்பு ? குவியும் வெறுப்பு ? என்னை அழிக்க வேண்டுமென்ற துடிப்பு ?
ஆனால், இது போன்ற தாக்குதல்களெல்லாம், கண்ணப்ப நாயினார் சிவபெருமானை கல்லால் வழிபட்டபோது, மலர்களாக மாறி அவருக்கு மரியாதை செய்தது போல எனக்கும் மரியாதை செய்கின்றன.
அய்யகோ…. இந்தியா டுடே வார இதழில் உண்மையை எழுதி விட்டார்களே…. ஊழலை அம்பலப்படுத்தி விட்டார்களே…. என்று உடனடியாக பதவி விலகி நத்தையைப் போல ஓட்டுக்குள் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு நான் என்ன சூடு சொரணை உள்ளவனா ? காண்டாமிருகத்தை விட தடித்த தோலுண்டு. பதிலளிக்க எழுதுகோளுண்டு. கழக கண்மணிகளிடம் வீர வாளுண்டு.
குபேரக் குடும்பம் என்று என்னை அழைக்கிறார்களே, நானும் என் குடும்பத்தாரும் அப்படி என்ன பேராசைக்காரர்களா ? வாய்க்கு வாய் திராவிடம், திராவிடம் என்று அழைத்தாலும், தெலுங்கு பேசும் ஆந்திரம், மலையாளம் பேசும் கேரளம், கன்னடம் பேசும் கர்நாடக மாநிலங்களை அப்படியேவா விலைக்கு வாங்கி விட்டோம் ? தமிழகத்தையும் பாண்டிச்சேரியையும் அபகரித்து விட்டு திருப்தியோடு இருக்கவில்லை ?
பெங்களுருவில் இப்போதுதான் கால் பதித்திருக்கிறோம். கேரளாவுக்கு, குமுளி வழியாக இப்போதுதான் புறப்படத் தொடங்கியிருக்கிறோம். சந்திரபாபு நாயுடுவிடம் இப்போதுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்குள்ளாக என்ன அவசரம் ?
பேராசைக் காரனைப் போல என்னை சித்தரித்திருக்கிறார்களே ? கொடுக்கும் மனமற்றவனா இந்தக் கருணாநிதி ? இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கவில்லை ? கேரளாவுக்கு முல்லைப் பெரியாறை வழங்க வில்லை ? ஆந்திரத்துக்கு பாலாற்றை வழங்கவில்லை ? கர்நாடகத்துக்கு காவிரியை வழங்கவில்லை ? சொத்து சேர்க்க வேண்டும் என்பதற்காக எனது மானம் மரியாதையெல்லாம் வாரி வழங்கவில்லை ? என்னைப் போய் பேராசைக்காரன் போல எழுதியிருக்கிறார்களே ?
எஜமான் படத்திலே தம்பி நெப்போலியன் ஒரு வசனம் பேசுவார். கல்யாண வீடு என்றால் நான்தான் மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். இழவு வீடு என்றால் நான்தான் பிணமாக இருக்க வேண்டும் என்று. அந்த வசனத்தை நான் எழுதவில்லையே தவிர, அந்த வசனத்தின் படிதானே நான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறேன்.
திருக்குவளையிலிருந்து வந்த ஒரு தமிழன் வந்தான். வென்றான் என்று மட்டும் இல்லாமல், மெக்சிகோவின் கார்லோஸ் ஸ்லிம் போலவோ, பில் கேட்ஸ் போலவோ, வாரன் பஃபெட் போலவோ முகேஷ் அம்பானி போலவோ, லட்சுமி மிட்டல் போலவோ, உலக பணக்காரர்களில் ஒருவன் இந்தக் கருணாநிதி. அவன் மட்டுமல்லாமல், அவன் குடும்பத்தினர் அனைவரையும் உலக பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி விட்டான் என்று வரலாற்றில் எழுதி விடப் போகிறார்களே என்று அஞ்சியல்லவா இன்று இந்தியா டுடே என்ற ஏடு எழுதி கிழித்திருக்கிறது ?
இது போன்று இந்தியா டுடே என்ற நாளேடு அன்றே எழுதும் என்று அறிந்துதான் அண்ணா, அடைந்தால் திராவிட நாடு என்று சொன்னார். நிரந்தரமாக பாம்புக்கும் பல்லிக்கும் நடுவே வைத்து விடுவார்களோ, என்று எண்ணி இன்பத் திராவிடத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதன் விளைவுதானே இது போன்ற இந்தியா டுடே என்ற ஏடுகள் ஆட்டம் போடுகின்றன ?
இன்பத் திராவிடம் அமைந்திருந்தால் இந்தியா டுடே ஏடு இருந்திருக்குமா ? திராவிடா டுடே என்றுதானே ஒரு ஏடு இருந்திருக்கும். அதையும் என்னுடைய ரைசிங் சன் யாராவது ஒருவர் தானே நடத்திக் கொண்டிருப்பார்கள் ?
ஆனந்தத் தாண்டவம் போடும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிக்க வேண்டாமா ? கொட்டத்தை அடக்க வேண்டாமா ? என்று எண்ணி எனது அன்பு உடன்பிறப்புகள் ஆர்ப்பரிப்பது எனக்கு தெரிகிறது. ஒரு புறம் பழக்கடை அன்பழகனும், மறுபுறம் விஎஸ் பாபுவும், மற்றொரு புரம் உசேனும், தெற்கே ஸ்டிக்கர் பொட்டும் கிளம்புகிறது என்றால், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அன்பு இளவல் ஐபிஎஸ் அதிகாரி என்பதையும் மறந்து, நோன்பை துறந்து, கழக உடன்பிறப்பாக மாறி அந்த அலுவலகத்தை துவம்சம் செய்ய புலியென புறப்பட்டு வருகிறார்.
இந்த அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறான் இந்தக் கருணாநிதி ? எப்படி அடக்கப் போகிறான் இந்த புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை ?
இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்.
வன்முறையிலே என்றுமே நம்பிக்கை இல்லாதவன் இந்தக் கருணாநிதி. அறிஞர் அண்ணா என்னை கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டோடுதான் வளர்த்திருக்கிறார். அதனால், இந்தப் புறநானூற்றுப் புலிக் கூட்டத்தை இப்போதைக்கு அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது நானும் எனது குடும்பமாகவும் இருக்க வேண்டும் என்பது தானே வள்ளுவன் வாக்கு ?
ஊரையடித்து உலையில் போட்டு; குடும்பத்தோடு
நிம்ம தியாக வாழ்
என்றுதானே அய்யன் வள்ளுவன் எனக்கு கற்றுத் தந்திருக்கிறான் ? இதை நீ அறியமாட்டாயா உடன்பிறப்பே ?.
அன்புடன்
மு.க
நன்றி இந்தியா டுடே வார இதழ்
சவுக்கு
ஆமா திருக்குவளையில இருந்து ஒரு தகரப்பெட்டி கொண்டு வந்தாரே அந்த பொட்டியில் என்ன இருந்திருக்கும். தெரியுமா சவுக்கு? அதுல அவுங்க அப்பா முத்து வேலர் எதுவும் புதையல் வெச்சுருந்திருக்க போறாரு.
ReplyDeleteNo Words With me to Appreciate You Savukku.
ReplyDeleteExcellent. All are Hundred Percent True.
You are the True And Brave Tamilan.
Keep It Up...
குருணாவின் குடும்பத்தை இப்படி சந்தி சிரிக்க வச்சுட்டாங்களே
ReplyDeleteI thought this was really Mr Karunanidhi, bursting out against India Today. He can borrow your text. Why blame Mr Karunathidhi while there are crores and crores of people who would sell their votes for ransom and bring the corrupt to the chairs.
ReplyDeleteBlame ourselves.
புருகரு வருநிலன்
ReplyDeleteபோருகென போகவே,
அருகரு முரிசடி
அங்கொரு இன்கொரு
நரகன விருமையும்
குடலொடு எதிருகம்,
மண்ணென மடுகுவர்
குன்றுடன் குழியவள்
மலையதும் மணியென - என்
புளிலது தொங்கிடா
அனுதின மதிலிரு
வழிதொரு வெண்மணி
கடலென வருவியாய்
பெருகிட முதிருவர்
நடையொரு தடையென
கடயவர் கருதிடர்
பிடியத னுருகுமை
பரபர குருகுரு- திரு
வள்ளுவன் குள்ளமாய்
வரித்தொரு வழுவியம்
சில்லொடொ சிரசதில்
முள்ளென பாய்ந்தனன்
டமிளொடு டெலுங்குதம்
லகரமு மகரமும்
லாவியர் திமுகம
எதிரிட வருகியர்
குடுகல முடுகியம்
குனிகனி கனிமொழி
அழகிரி அலைகடல்
ராலினும் ப்பெருகடல்
வடதிசை அவளுடம்
வழிதட மறந்திடு,,,,
''பாட்டின் பயன் அறிந்தவர் பூட்டுவீர் அதன் பொருள்,,"
Well Said.. I am not sure whether CM will read this.. if possible, pl. pass on this to him without fail.
ReplyDeleteமனிதனுக்கு நரம்பிருக்கும், நரம்பிருந்தால் உறைக்கும்,
ReplyDeleteஇந்த மூதேவிக்குத்தான் ஒரு மண்ணும் கிடையாதே,
தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டுமென்பான்,
நீங்கள் சொன்னதுபோல கண்ணப்பர் கல்லால்
அர்சித்தாலும் சிவன் பூவாக ஏற்றுக்கொண்டதுபோல்
பொறுத்தருள்கின்றேன், என்று புலுடா விடுவான்,
ரோசம் மானமில்லாத பிறப்பு, அவ்வளவுதான்,
savukku illa ithu dubukku. Verum karunanidhi-yin oozhalai kandu mattumthan intha katturai ezhutha pattullatha? Do you believe that Indian Media chooses a person for attack merely based on his antics not on his caste, 'varna?'and the person under attack is stands for which varna?
ReplyDeleteTake for instance, Raja's case. Media started charging him as he is involved in some 5-10 thousand crores. Then they 'hiked' the amount to 30,000 and doubled it to 60,000 crore. Then thinking as if people gone nuts they raised the amount and now charges him of swindling 1 lac crore. do you know what it means by one lakh crore? equivalent to defence budget of india a few years ago. Can anyone swindle this much of amount? Let us see basic for their attack in brief: "Raja allotted spectrum to people on first come first serve basis instead of more rationale method of auctioning. By doing this he allotted much valuable spectrum to meagre amount of few thousand crore rupees, which can be compared to the whopping 70,000 crore auction amount realised in the 3G spectrum. Stakes of the company which purchased spectrum was sold for several thousands of crores, pointing to large scale scandal".
In any charge, person under charge should be given chance to explain his case. The media industry which is notorious for favouritism, and commercialisation of its own coloumns for favouring advertisers and directly selling its pages in the way of paid news, hypocritically write, broadcast about the corruption of Raja (only) and denies him the chance to present his case. The Hindu however carried his point in detail in a interview. In that interview (and even before) Raja raised some points. juice of his arguments : "I am the person to explore un utilised spectrum which can be sold. Earlier, the BJP government whose members question the method of allocation was indeed made first-come- first-serve as a method of spectrum allocation. More than that they allocated spectrum for free, yes absolutely free, to certain companies. the first come first serve basis can not be compared with auction method should not be compared in a wrong way. in the first method, one pays license fee and continues to pay from their revenue. This is called revenue sharing method. The second one is called auctioning in which who gets allocation would not pay anything other then auction amount. You claim that 3g auction fetched Rs.70,000 to government. Yes, 2g spectrum if not in initial license fee, has also fetched government already 70,000 cr by way of revenue sharing".
Media may find fault with his arguments. But they should address his answers and replies. But they remain as if they are deaf to the Raja's arguements and instead raise the "corruption amount" Rs.1 lakh crore, as if they are playing child play.
Beyond all these arguments, surely raja should have swindled some money if not in the scale propagated by him antagonists. But can they cite one department where corruption was not there? Then why this selective attack. Will they illustrate family map of Nehru. They would not. Instead they glorify Rahul. Even if they criticise them they make him relevant in Indian polity by their decent well worded criticisms. When it comes to Karunanidhis, Laalus and Mayavatis they turn into merciless crusaders of corruption. Viva their honesty and yours.
இந்த கட்டுரை மிக அருமை தோழரே
ReplyDeleteசவுக்கு கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும் , தங்களின் வலைதளத்தை பற்றி போலீஸ் மாநாட்டில் விவாதிக்க பட்டதாக தெரிகிறது ,இப்போது திருக்குவளை தியாகியை பற்றி எழுதுவதால் விட்டுக்கு ஆட்டோ வரும் , கவனமாக இருக்கவும் ....... பாரதிராஜா , பழ கருப்பையா வர்களை தாக்கிய திருக்குவளை முஉதேவி கழக அடியட்டகளிடம் கவனமாக இருக்குவும்
ReplyDeleteதப்புத் தப்பா எழுதினாலும் மேட்டுக்குடி ஆங்கிலத்துலதான் எழுதுவேன்னு அடம்புடிச்சி, ராசாவுக்கும் இன்னபிற ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வக்காலத்து வாங்கியிருக்கும் அனானி அண்ணனுக்கு, போங்க போயி வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா வரச்சொல்லுங்க.
ReplyDelete296963 hits to Savukku.net. Three lac by tomorrow morning.
ReplyDeleteYou have with your ability and fluid writing evinced interst in lot of people. How about providing an english translation of your blogs and hosting separately. It can then get in to the attention of Rest of India. Remember if this dynasty has to be brought to books for corruption it is important for the issue to be debated in Parliament.
I find only other Magazine which still is fighting the Karuna regime is Thuglaq.
You may have your differences but how about a meeting with cho to share all the evidence as he has influence in national media?
Robin
well savukku.but you be very very carefully.
ReplyDeleteதிTHIRUDARGAL முMUNETTRA கKALAGAM
ReplyDeleteசவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா ? வாழ்க்கையில் பாதி நாளை கொடாநாட்டில் கழிக்கும் ஜெயலலிதா பத்தி ஒரு வார்த்தை எழுத மாட்டிக்கிறீங்க. அதையும் எழுதுங்க தோழர்
ReplyDeleteSuper posting, please take a printout and give it to public, forward this to your friends also.
ReplyDeleteOne of the best... keep it up bud.
ReplyDeletePlease investigate and write abovt the Sun Tv Goons attack on Saidapet Checkers Hotel incident.
ReplyDeleteலல்லு பாப்பிரி, நேரு பிரியங்கா,சோனியா குடும்பங்கள். தி.மு.க. கருடனிடம் பிச்சை வாங்க வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் ஐந்து குடும்பங்களிடம் அடக்கம். வல்லரசு வல்லரசு என்பதன் பதம் இப்போதான் புரிகிறது.
ReplyDeleteReally nice. Tamil Nadu needs a change.
ReplyDeleteNaan poi periyavargalai vara solvathu irukkattum. Un veengiya moolayil irunthu oru pathilum illaya en neenda madalukku. Thappai kandupidikka theriyum unakku aangilam enna thadai. en thavaru enakkum theriyum. pathil ethavathu irunthaal ezhuthu. Illayel pothikkondu po.
ReplyDelete//சவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா ?//
ReplyDeleteபோடா டுபுக்கு. போய் உன் லக்கி எப்படி இருக்குன்னு ஆட்சியில் இருப்பவனிடம் நக்கி பிழை
குடும்ப மரத்துல இந்தியா டுடே , ராசாவ விட்டுட்டதனால அவருக்கு ஒருத்தர் வக்காலத்து வாங்கியிருக்காரு.
ReplyDeleteSuperb! good job!
ReplyDelete-Vazhuthi
arumayyaa. eppadithan ippadi ezhutha varutho. kadavul kuduththa gift than ithu.
ReplyDeleteஉண்மையான கட்டுரை
ReplyDeleteபெரியவருக்கு புத்திகெட்டு போய் ரொம்ப நாள் ஆச்சுங்க....
கருநாய்நிதி இதற்கு வழக்கு போடட்டும்.
ReplyDeletehttp://www.tamilnet.tv/news/2009/123444/karunanidhi-prabahkaran-friends/
//இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்//
ReplyDeleteஎன்னா ??!!... அப்போ அஞ்சாநெஞ்சன் எங்கள் அண்ணன் அழகிரிய பத்தி எழுத மாட்டங்களா??? ...டேய் யாருடா அங்க?? அண்ணன் அட்டாக் பாண்டி,மேயர் தேன்மொழி எல்லாரும் கெலம்புங்கள் India today ஆஃபிஸ்க்கு பயபுள்ளங்களுக்கு தினகரன் மேட்டர் மறந்துடுச்சு போல!!...
Excellent Article
ReplyDeleteBe Aware OF Political People. Any thing Happened To You That(CM) Only responsible.
Great Job. You Are Only True Tamilan...........
அருமையான பதிவு ! இப்பதிவு ஒரு சிறு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை !!
ReplyDeleteஉண்மையை சொல்ல தயிரியம் வேண்டும் !
I really appreciate and support Suvukku for that !
Between I can see lots of anonymous comments..
அயோக்கியத்தனத்தை எதிர்க்க யோக்கியம் வேண்டும் !
When people cant even support / express their real face why the heck are you commenting ?
ஏன் வீட்டுக்கு போலீஸ் வருமோனு பயமா ??
எவ்ளோ பேர் வீட்டுக்கு போலீஸ் அனுப்பமுடியும் ?
யோசிங்கட .. திருந்துற வழிய பாருங்க !!
ithuku pathil varum ana varathu than.
ReplyDeleteDear Savukku,
ReplyDeleteExcellent piece. We must keep on attacking Karunanidhi as this man is enjoying in destroying every facet of Tamil Nadu's social life... I was told by one of my sources that this much of huge money invested by Karunanidhi's family members in Tamil film industry is raising eyebrows of people at the helm of affairs. I was told that chances are very much that Mumbai underworld with terror links is slowly gaining ground in Tamil film industry through these investments. Investing this much of money is not possible by indulging in corruption alone. Karunanidhi's family could do anything for money. David Coleman Hedley now in FBI custody and involved in Mumbai 26/11 attacks was linked with Mahash Bhat's son, but later cleared by NIA. Just imagine the plight of Tamil Nadu ... high time for Govt of India to wake up
R Mani Journalist
//சவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா ? வாழ்க்கையில் பாதி நாளை கொடாநாட்டில் கழிக்கும் ஜெயலலிதா பத்தி ஒரு வார்த்தை எழுத மாட்டிக்கிறீங்க. அதையும் எழுதுங்க தோழர் //
ReplyDeleteலக்கி வந்தாச்சு...கருணாநிதியை குப்பறப்போட்டு அடித்தால் லக்கி மோஹன்குமாருக்கு வலிக்கும்
The India today article is no where critical on Karunanidhi and his families wide spread roots into the entertainment industry. Savukku seems to be a wounded Tiger(? who feels their movement got buried because of MK, which is just a mirage) or another JJ slave and most who have voiced comments are similar slaves. Has anyone raised concerns of how the Ambanis grew up to this level or for that matter - the sudden rise in assets of industries like Zee TV? Just being at the right time, right place and right approach can make such growth possible. Having said that the element of doubt is corruption at politics which is inherent and rampant in the Indian system. If an actor can make a fortune in a single movie, why not the producers? Most media are envious of the Sun network and the extended DMK family for they have single handedly downed the entire competition! Why kunkumam became a success? Had anyone have the guts of giving a freebie worth more than the weekly and for a long period? Thats strategical marketing. Yes, am no supporter of DMK but personal attacks on a successful biz just shows cheap sensationalism which can be achieved by publishing a few nude pictures too. Get a life, low lives who just exhibit ignorance and envy at anything and everything behind MK!
ReplyDeleteINDIA MUZHUVATHUM IPPADITHAAN ARASIYAL PIZHAIPPU ULLORE.. SAGALATHAIYUM VALAITHTHU ULLANAR..INDHA KUDUMBAM OLICHAATHAAN TAMIL NADU URUPPADUM.
ReplyDeleteகருணாநிதி குடும்ப மரத்தில் அரவிந்தன் படத்த 'இந்திய டுடே' வைக்க மறந்து விட்டாங்க. அந்த இடத்துல கேப் விட்டுட்டாங்க. ஒருவேளை, அதில் ராஜா-வுக்காக இடம் விட்டு விட்டாங்களோ என்னவோ? ராஜா படத்த வைச்சா, அத பத்தி வேற (ஸ்பெக்ட்ரம்) விரிவா எழுத வேண்டி இருக்கும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?
ReplyDeleteராஜா பெயர் இல்லாத கோபத்திலதான், அந்த அனானி அண்ணன். தேவையே இல்லமால் 'ராசா' பத்தி இங்கிலி பீசுல புலம்பி இருக்கார் போல தெரியுது.
courtesy: thatstamil.oneindia.net
ReplyDeleteபாஜக ஆட்சியில் இலவசமாய் தரப்பட்ட ஸ்பெக்ட்ரம்: நஷ்டம் ரூ. 1.6 லட்சம் கோடி
டெல்லி: பாஜக ஆட்சியில் செல்போன் நிறுவனங்களுக்கு இலவசமாகவே 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு அலைவரிசை இலவசமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாட்டுக்கு ரூ. 1.6 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறினார்.
2 ஜி அலைவரிசை விற்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், நாட்டுக்கு ரூ. 60,000 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தான் சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல் என்றும் பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராஜா,
பாஜக ஆட்சியில் 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு ஸ்பெக்டரத்தை இலவசமாகவே வழங்கினார்கள். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 1.6 லட்சம் கோடி. காசே வாங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு ஏன் ஸ்பெக்ட்ரத்தை தந்தார்கள்?.
பாஜக ஆட்சியில் நடந்த இந்த 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தான் இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மகா பெரிய ஊழல்.
நாங்கள் மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் சொன்ன விதிப்படி தான் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டோம். எந்த விதிமுறையையும் நாங்கள் மீறவில்லை. எந்த விசாரணைக்கும் நான் தயார். இதனால் நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.
இதே அருண் ஜேட்லி தான் பாஜக ஆட்சியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக பரிந்து பேசியவர். ஒரு செல்போன் நிறுவனத்துக்காக உயர் நீதிமன்றத்திலேயே வாதாடியவர். இப்போது அரசியலுக்காக இல்லாத ஒன்றைக் கூறுகிறார்.
இப்போது அருண் ஜேட்லிக்குள்ளேயே சண்டை நடந்து கொண்டுள்ளது. அவரது அரசியல் மூளையும் அவருக்குள் உள்ள வக்கீல மூளையும் மோதிக் கொண்டுள்ளன. இதில் எந்த மூளை வெல்லுமோ தெரியாது என்றார்.
post this article again during election time
ReplyDelete