Tuesday, September 7, 2010

இளங்கோவடிகளும், எல்காட் நிறுவனமும்.


தலைப்பை பார்த்து விட்டு, இந்தப் பதிவு ஏதோ சிலப்பதிகாரம் தொடர்பானது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இந்தப் பதிவு, சிலப்பதிகாரம் பற்றியது அல்ல. எல்காட் நிறுவனத்தில் உள்ள இளங்கோவன் என்ற ஒரு அதிகாரியின் சித்து விளையாட்டைப் பற்றியது.

எல்காட் நிறுவனம் என்பதன் பணி என்ன ? தமிழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும், கணினி வாங்கித் தருவது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கணினி வாங்குவது, நில ஆவணங்கள் மற்றம் பத்திரப் பதிவுத் துறை ஆவணங்களை கணினி மயப்படுத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை கணினி மயப் படுத்தவது உள்ளிட்ட முக்கியப் பணிகளை செய்து வரும் தமிழக அரசின் நிறுவனம் தான் எல்காட்.

இந்த எல்காட் நிறுவனம், ஒரு துணை நிறுவனத்தை துவக்கி, அரசுப் பணம் 700 கோடி ரூபாயை கபளீகரம் செய்ததை ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், தான் தாக்கல் செய்திருந்த நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தார்.

ஆவணங்களோடு தெள்ளத் தெளிவாக, அரசு முதலீடு செய்திருந்த ஒரு நிறுவனம், ஒரே நாளில் எப்படிக் காணாமல் போனது என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தப் பட வேண்டும் என்றும் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அது தொடர்பாக விசாரணை நடத்துவதற்குப் பதிலாக அவரை பணி இடை நீக்கம் செய்தது கருணாநிதி அரசு.

உமாசங்கருக்கு தலித் அமைப்புகளிடமிருந்தும், மற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலிருந்தும் கிடைத்த ஆதரவை பார்த்த கருணாநிதி அரசு, பயந்து பின் வாங்கியது. ஆனால் உமாசங்கருக்கு கிடைத்திருக்கும் டான்சி மேலாண்மை இயக்குநர் என்ற புதிய பதவி, அவரை மேலும் சிக்கலில் ஆழ்த்தவே என்று சவுக்கு பார்க்கிறது. அந்தத் துறையில் ஏதாவது ஒரு புகாரில் உமா சங்கரை சிக்க வைக்கவே இந்த பணி நியமனமோ என்ற சந்தேகம் சவுக்குக்கு உள்ளது.

உமாசங்கர் அவர்கள் மேலும் கவனமாக, தான் கையெழுத்துப் போடும் கோப்புகளில் அதிக கவனத்தோடும், தொலைபேசியில் பேசும் உரையாடல்களில் ஜாக்ரதை உணர்வோடும் இருக்க வேண்டும் என்று சவுக்கு கேட்டுக் கொள்கிறது. ஏனெனில், சாதாரணமாகவே, சகட்டு மேனிக்கு அனைவரது போனையும் ஒட்டுக் கேட்கும், நபர்கள் உளவுத் துறையில் இருப்பதால், இவரது மொபைல், வீட்டுத் தொலைபேசி மற்றும், அலுவலகத் தொலைபேசி கட்டாயமாக ஒட்டுக் கேட்பில் இருக்கும் என்று சவுக்கு நம்புகிறது.

இந்த எல்காட் நிறுவனம், அரசுத் துறைகளுக்காகவும், பல்வேறு தேவைகளுக்காகவும், டெண்டர் விடுகிறது. இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளும் இது போல ஓபன் டெண்டர் மூலமாகவே பெறப் படுகின்றன.

இந்த டெண்டர்கள் பரிசீலனை செய்யப் படுகையில் L1, L2, L3 என்று மூன்று வகையாக பரிசீலிக்கப் படும். L1 என்றால் Lowest Rate 1 என்று பொருள். எல்லா டெண்டர்களிலும், குறைந்த விலையை குறிப்பிட்டிருக்கும் L1க்குத் தான் ஆர்டர் தர வேண்டும். L1ஐ விட்டு விட்டு L2 தேர்ந்தெடுக்கப் படும் பட்சத்தில், அந்த டெண்டர் கமிட்டி அதற்கான காரணங்களை பதிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, L1 நிறுவனத்தின் பொருட்கள் தரமானதாக இல்லை, அந்த நிறுவனம் உடனடியாக குறிப்பிட்ட காலத்துக்குள் பொருட்களை தராது, ஏற்கனவே இது போல டிஃபால்ட் ஆன நிறுவனம் போன்ற வலுவான காரணங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதனால் பெரும்பாலான நேர்வுகளில் L1 தான் தேர்ந்தெடுக்கப் படும். ஒரு டெண்டருக்கு ரேட்டை அனுப்பும் முன் ஒரு நிறுவனம், அந்த ரேட் கட்டுப் படியாகுமா, சப்ளை செய்ய முடியுமா, இந்த ரேட்டில் லாபம் கிட்டுமா என்பதையெல்லாம் பரிசீலித்துதான் அனுப்பும். சில நிறுவனங்கள், குறைந்த விலையை போட்டு பெரிய அளவில் லாபம் இல்லாவிடினும், அரசு ஆர்டர் கிடைத்தால் அடுத்த ஆர்டரில் லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டு விடுவார்கள். ஆனால், L1 ரேட்டுக்கு மாறாக L2வையோ L3யையோ, தேர்ந்தெடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.

இந்தச் சிக்கலைத் தவிர்க்க எல்காட் நிறுவனத்திற்கு டெண்டர் கோட் செய்யும் ஒரு நிறுவனம், டெண்டர் எப்படி விட வேண்டும் என்று மின்னஞ்சலில் எல்காட் நிறுவனத்தின் பொது மேலாளரான ஆர்.இளங்கோ என்பவருக்கு ஆரஞ்சு எஜுகேஷன் என்ற மல்டி மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலின் தமிழாக்கம் வருமாறு.

டியர் இளங்கோ சார்,

வரக்கூடிய மேன் பவர் டெண்டர் எப்படி விட வேண்டும் என்பது குறித்த எனது எண்ணங்கள்.

சார், இந்த டெண்டரில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள், டெக்னிக்கல் சூப்பர்வைசர்கள், ப்ரோக்ராம்மர்கள் என்று பல்வேறு திறன்வாய்ந்த நபர்களின் தேவை இருப்பதால், இந்த டெண்டரில் முக்கியமாக மேன்பவர், டேட்டா என்ட்ரி பணி மற்றும் தொழில் நுட்ப அறிவு தேவையாக இருப்பதாலும், நல்ல தொழில்நுட்ப பின்னணி கொண்ட குழுவினரிடம் இந்த டெண்டர் கிடைக்க வேண்டும் (உதாரணத்திற்கு எங்களின் பின்னணி இது போன்ற தொழில்நுட்ப வல்லுனர்களை பயிற்சி அளித்து அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக அனுப்ப இயலும்)

இதை அடிப்படையாக கொண்டு, டெண்டரில் விண்ணப்பிப்பதற்கான தகுதி கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.

1. ஆண்டுக்கு 2.5 கோடிக்கும் மேலாக கடந்த மூன்று ஆண்டுகள் டர்ன் ஓவர்
2. அரசு மற்றும் அரசு சார் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு ரூபாய் 40 லட்சத்திற்கு குறையாமல் டேட்டா என்ட்ரி மற்றும் வேலை பார்த்திருப்பதற்கான ஆவணங்கள் மற்றும் டெண்டர் பெற்றதற்கான சான்று.
3. மூன்றில் இரண்டு முக்கிய வேலைகளை (டெட்டா என்ட்ரி, மற்றும் கணினி பயிற்சி ) எடுத்துச் செய்ததற்கான அனுபவம்.
4. அரசுத் துறைகளில் டெண்டர் எடுத்து அதை நிறைவாகச் செய்து முடித்ததற்கான சான்றிதழ்
5. மாநில அளவில் டெண்டர் எடுத்து வேலை முடித்ததற்கான அனுபவம்.
6. உங்கள் கையில் கட்டுப் பாட்டை வைத்துக் கொள்ளும் அளவுக்கு பரிசீலிக்கும் அளவுகோல்கள் (அனுபவம் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு சிறந்த மூன்று நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப் பட வேண்டும்)
மாநில அளவில் அனுபவம் மற்றும் கூடுதலாக கணினி பயிற்சி மற்றும் டேட்டா என்ட்ரி அனுபவம்.

முதல் சுற்று முடிந்து விலை தொடர்பான பேச்சு வார்த்தைக்கு வரும் முன், மிகுந்த கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும். முதல் கட்ட பரிசீலனைக்குப் பின் சிறந்த மூன்று நிறுவனங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். மேலும் ஜீவன் மற்றும் ஸிக்மா நிறுவனங்கள் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் படக் கூடாது. அவர்கள் மிகக் குறைவான விலையை குறிப்பிடுவார்கள், அந்த விலைக்கு நாங்கள் குறைத்து குறிப்பிட முடியாது. இவர்களை வெளியே தள்ளுவதற்கான சிறந்த வழி முதல் கட்ட பரிசீலயின் போதுதான். ஜீவன் நிறுவனத்தை ஏற்கனவே இது போல முதல் கட்ட பரிசீலனையில் தள்ளி விட்டு விட்டோம், அவருக்கும் முதல் கட்ட பரிசீலனைக்குப் பிறகு அடுத்தக் கட்டத்திற்கு வர முடியாது என்பது புரிந்து விட்டது. இரண்டே இரண்டு நிறுவனங்கள் இறுதி கட்டம் வரை வந்து விட்டால் பேச்சுவார்த்தைக்கு இரண்டு பேர்தான் வருவார்கள். எங்கள் நிறுவனத்தை போல ITFS data entry மற்றும் Linux training என்ற எல்லா டெண்டர்களிலும் விலை தொடர்பான பேச்சுவார்த்தை நடக்கும் போது நாங்கள் தான் L1 ஆக இருப்போம். இந்த உத்தியையே நாம் போகஸ் டெண்டர் மற்றும் மேன்பவர் டெண்டரில் கையாள வேண்டும். இந்த இரண்டு டெண்டர்களையும் நாம் மிகுந்த கவனத்தோடு கையாள வேண்டும். மிகுந்த கட்டுப் பாடுகளை விதித்தால் தான் நாம் முன்னேற முடியும்.

போகஸ் டெண்டருக்கு ஒரு வேலைக்கான மதிப்பீட்டை ஒரு கோடிக்கு உயர்த்தினல் வெறும் நான்கு நிறுவனங்கள் தான் போட்டி போட இயலும். இறுதி கட்டத்திற்க 2 நிறுவனங்கள் தான் வரும். இதை பற்றி சிந்தியுங்கள் சார்.

நீங்களும் நாங்களும் ஒரு சிறந்த அணி இளங்கோ சார். உங்களின் திறமையைப் பார்த்தும், அனுபவத்தைப் பார்த்தும் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன் சார். இதற்கெல்லாம் மேலாக நான் உங்களோடு மிகுந்த பாதுகாப்பாகவும், உணர்கிறேன் சார். நான் உங்களோடு உங்கள் வீட்டில் இருப்பது போலவும், உங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவும் உணர்கிறேன் சார். உங்களின் உதவிக்கு மிக்க நன்றி இளங்கோ சார். என்னுடைய இனிமையான கடவுளிடம் நமது இந்த அற்புதமான உறவை என்றென்றைக்கும் பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் சார்.

அன்புடன்
கீதா


இதற்கு இளங்கோ பதில் எழுதுகிறார்.

நன்றி கீதா. ஒரு உறவு பலமாக இருந்து விட்டால், வெளிப்புற சக்திகள் ஏதாவது ஒரு காரணத்திற்காக அதன் மீது தாக்கம் செலுத்தும் வரை அந்த உறவு நீண்ட காலம் தொடரும் என்றே நான் எண்ணுகிறேன். என்னுடைய இமேஜ் பாதிக்காத வரை, தொழில் ரீதியாக என்னால் இயன்றவற்றை நான் உங்களுக்கு செய்கிறேன்.

அன்புடன்

ஆர்.இளங்கோ
பொது மேலாளர் (பி)
எல்காட்
692, அண்ணா சாலை
நந்தனம்,
சென்னை 600035
தொலைபேசி 65512323

(இளங்கோ சார். நான் உங்கள் குடும்பத்தில் ஒருத்தி போல உணர்கிறேன். இந்த அற்புதமான உறவு தொடர வேண்டும்னு கீதா மேடம் எழுதியிருக்காங்களே. என்னா ஒறவு சார் அது ?)




மேற்கூறிய இரண்டு மின்னஞ்சல்களையும், ஒரு அப்பாவி ஊழியர், தற்போது எல்காட்டின் மேலாண் இயக்குநராக இருக்கும் சந்தோஷ் பாபுவுக்கு அவருடைய santynits@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கிறார்.



அவ்வளவுதான். என்ன நடக்கிறது தெரியுமா ? அந்த ஊழியருக்கு தண்டனை வழங்கப் பட்டு, பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப் படுகிறார்.

இளங்கோ, கலர் டிவி கொள்முதல் செய்யும் பிரிவுக்கு மாற்றப் பட்டு கூடுதல் பொறுப்பை கவனிக்கிறார்.

இந்த ஆரஞ்சு எஜுகேஷன் என்னும் சன் ஐடெக் நிறுவனத்திற்கு தமிழகத்தின் 30 மாவட்டங்களில் 7200 மாணவர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் டெண்டர் வழங்கப் படுகிறது. இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள பல்வேறு ஆர்டர்கள் இதே நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.



இந்த கேடு கெட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பாருங்கள் ?

இது தொடர்பாக தகவல் தொழில் நுட்ப செயலர் டேவிட் தாவிதாரிடம் புகார் கொடுக்கலாம் என்று பார்த்தால், இந்த நபர் மீது ஏற்கனவே வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக ஒரு குற்றச் சாட்டு.

சரி அமைச்சரிடம் புகார் கொடுக்கலாம் என்றால், பூங்கோதை ஏற்கனவே லஞ்சப் புகாரில் சிக்கிய தனது உறவினருக்காக ஐபிஎஸ் அதிகாரி உபாத்யாயை போனில் தொடர்பு கொண்டு சிக்கியவர்.

இது போன்ற திருடர்களை கருணாநிதி நல்ல பதவி கொடுத்து அலங்கரிக்கிறார். எனக்கு ஒரு வீட்டு மனை, ஒரு Flat தவிர வேறு சொத்து எதுவுமே இல்லை என்று கூறும் ஐஏஎஸ் அதிகாரி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து வழக்கு. எப்படி இருக்கிறது ?

கருணாநிதி அரசில்தான் இது போன்ற கேடுகெட்ட அதிகாரிகள் தலை கொழுத்து ஆடுகிறார்கள்.

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரை தொலைபேசியில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளைப் பற்றி விசாரிக்காதே என்று மிரட்டிய ஸ்ரீபதிக்கு தலைமை தகவல் ஆணையர் பதவி. ஊரே நாம் இந்தப் பதவியை ஏற்பதை எதிர்க்கிறதே என்று கொஞ்சமும் சூடு சொரணை இல்லாமல் சிரித்துக் கொண்டே பதவி ஏற்கும் ஒரு ஜென்மம்.

மரியாதைக் குறைவாக எழுதியும் கூட வெட்கமில்லாமல் பதவியை தொடரும் தகவல் ஆணையர்கள்.

ஊழல் வழக்கில் எஃஐஆர் போட பரிந்துரைக்கப் பட்ட அதிகாரியை தலைமைச் செயலாளராக்கி அழகு பார்க்கும் ஒரு முதலமைச்சர்.

தனக்குத் தானே அப்பழுக்கற்ற ஊழியர் என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டு, அதை வைத்து வீட்டு மனை வாங்கும் ஒரு அயோக்கியத் தனமான ஐஏஎஸ் அதிகாரி.

ஊரில் உள்ளவர்கள் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றியும் சொத்து சேர்த்தது பற்றியும், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஆணவத்தோடு திரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.

இதை விட கேவலமாக எழுத முடியாது என்று ஒரு மாநகர காவல்துறை ஆணையாளரைப் பற்றி எழுதிய பிறகும், நான் ஊழலுக்கு எதிரானவன் என்று தனக்குத் தெரிந்த பத்திரிக்கையாளரை வைத்து செய்தி வெளியிடும் ஒரு கேவலமான கமிஷனர்.

சரியாகத் தானே சொன்னான் பாரதி

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று..

ஒரு பேய்க் கூட்டமே அரசாண்டு கொண்டிருக்கிறதே… சாத்திரங்கள் பிணந்தின்னாமல் வேறு என்ன செய்யும் ?
சவுக்கு

36 comments:

  1. சந்தோஷ் பாபுவா இப்படி செய்தார் , நம்பமுடியவில்லை............

    ReplyDelete
  2. \\ஊரில் உள்ளவர்கள் தொலைபேசியையெல்லாம் ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றியும் சொத்து சேர்த்தது பற்றியும், நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல்\\


    மானம் வெட்கம் சூடு சொரணை...அடுத்தவர் மலத்தை தின்னும் இந்த மானங்கெட்ட கழிவு தின்னும் பன்றிகளுக்கு இதுவெல்லாம் எங்கே இருக்க போகிறது சவுக்கு. இவர்கள் சோறு தின்னும் போது அந்த சோறு எப்படி வந்தது என்பதை ஒரு நிமிடம் மனசாட்சியை கொண்டு பார்த்தால் ...அதில் எத்தனையோ பரிதாபமான தமிழ்நாட்டு ஜீவன்களின் உழைப்பும்,ரத்தமும் தெரியும். இவர்களுக்கு அதெல்லாம் எங்கே தெரியப் போகிறது. ஆக...அடுத்த பிறவியில் இவர்கள் எல்லாம் உறுதியாக சாக்கடையில் நெளியும் புழுக்களாக பிறந்து கோடானுகோடி மக்களின் கழிவுகளை மேய்ந்து கொண்டிருக்கும் என்று சாக்கடைப்புழுவாக பிறப்பார்கள் என்று சாக்கடை புழு புராணம் சொல்கிறது. வாழ்கவளமுடன் பெரிய சாக்கடை புழுவாக போகும் முதல் புழு.

    ReplyDelete
  3. \\இந்த அற்புதமான உறவு தொடர வேண்டும்னு கீதா மேடம் எழுதியிருக்காங்களே. என்னா ஒறவு சார் அது ?//

    சவுக்கு..நம்ம முதல் அமைச்சர் அறிமுகம் செஞ்சாரே டெட்ரா பேக் பதநீர்...அது எப்பிடி இருக்குன்னு பாக்க ரெண்டு பேரும் சேந்து குடிக்க போயிருப்பாங்க.என்ன கொடும சார் இது.ரெண்டு பேர் சேந்து பதநீர் குடிக்கறது தப்பா?

    ReplyDelete
  4. பேய்களை விரட்டவேண்டுமானால் மாந்திரீகம்தான் சிறந்த வழி, அதற்கு நல்ல பூசாரி தேவை,பூசாரி கிட்டத்தட்ட தேசியத்தலைவன் பிரபாகரன் போலிருந்தால் பரவாயில்லை, ஒரு பூசாரியைத்தேடுங்கள் பேய்கள் சுடுகாடுபக்கமும் தூமை துவைக்குமிடங்களிலும் சாக்கடைச்சரிவுகளில்ம் சில மலக்குழிகளுக்குள்ளும் மறைவிடம் தேடி தொலைந்துவிடும் ,பரிசுத்தமான பூமியைக்காணலாம்,

    ReplyDelete
  5. Thileeban Thambi SureshSeptember 7, 2010 at 11:15 AM

    Time to wake up.., If karuna going to be a CM again then no one can save TN and tamil community.., Send this traitor (karuna) team to jail..,

    ReplyDelete
  6. உலகத்தமிழின விரோதி, திருக்குவளை தீயசக்தி கருணாநிதி முன்பு மனோகரா திரைப்படத்தில் ஒரு வசனம் எழுதியிருக்கும்... "வட்டமிடும் கழுகு, வளைத்துவிட்ட மலைப்பாம்பு, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்" ...இதுதான் அந்த வசனம்.

    தமிழகத்தை பிற்காலத்தில் நாமும், நம் குடும்பமும், நமக்கு "ஜால்ரா" அடிக்கும் அதிகாரிகளும் இதுபோல் சூழ்ந்துநின்று சுரண்டி கொள்ளையடிப்போம் என்பதைத்தான் அன்றே சொல்லியிருக்கிறார் என்பது என்போன்ற பொதுஜனங்களின் தாழ்மையான கருத்து.

    தோழர் சவுக்கு அவர்கள், மிக்க கவனமாக இருக்கவும். யாரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். "கருணா"க்கள் எங்கும் இருப்பார்கள். உங்கள் பாதுகாப்பில் அதிகம் கவனம் கொள்ளவும். தோழமையுடன்..சிங்கம்

    ReplyDelete
  7. Blogging -ஐ பொழுது போக்கிற்காக பயன் படுத்தாமல் நம்மிடையே உள்ள களைகளை எடுப்பதற்கு பயன் படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ! ! தொடரட்டும் உங்கள் பணி ! ! !

    ReplyDelete
  9. //நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறாற் போல எழுதியும், கொஞ்சமும் வெட்கமில்லாமல் ஆணவத்தோடு திரியும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி.//

    என்ன பாஸ் நீங்க!!... வெட்கம் எல்லாம் பார்த்தா தொழில் பண்ண முடியுமா? ..

    இவங்க எப்பவுமே இப்படித்தான் ஏதாவது BLOG எழுதிக்கிட்டே இருப்பாங்க...

    ReplyDelete
  10. Dear Savukku Anna,
    Epdeenga anna ungalala mattum ippadi proof-oda elutha mudiyuthu....

    Good...... Good......

    Keep Going....

    ReplyDelete
  11. Sema scene !!!
    epaidya email ellam kidachuthu .. kalakal :)

    ReplyDelete
  12. கவனம் தோழரே ...கவனம் தோழரே... 95 சதம் அரசு அதிகாரிகள் இதுமாதிரி விசயத்தில் ஒரே ஜாதி ...ஜாக்கிரதை ...

    ReplyDelete
  13. கேவலமான மனிதர்கள், முறையற்ற ஆட்சி , திறமையான கைஉட்டு ஆட்சியாளர், வாழ்க வளர்க தமிழகம்!

    ReplyDelete
  14. Blogging -ஐ பொழுது போக்கிற்காக பயன் படுத்தாமல் நம்மிடையே உள்ள களைகளை எடுப்பதற்கு பயன் படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி ....உங்கள் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்..எல்லாவற்றையும் சந்தேகத்தோடு அணுகவும்.

    ReplyDelete
  15. Well Said Savukku!! Eruma mela mazhai penja mathiri ellathaiyum kettutu appadiye erukunga entha PANAM thinnigal. Yepper patta thalaivargal erunthu atche senja naadu ethu!!! Makkal kita erunthu cinna athirupthi yerpattal kuda... dharmiga porupethu pathavi vilagunavunga erunthanga... Anna ennaiku nelamaiya paarunga.. makkal ellam senthu adichu thorathina kudaa... vangikitu panathaiyum pathaviyaiyum kattikitu ukkanthirukunga.. enna oru kiltharamana vazhkai?!?! ennaku achariyamana vishayam ennanaa!!! vayothikam kuda oru manushanuku poothumkira unarvai yerpaduthalaiyee!!! adutha thalaimuraiku vazhi vitu othungalam enkira ennam varalaiyee?!?! appavum than kudumbam... than vamsam?!?! Antha naarkali kuda avamana padum... evungalukellam edam koduka vendiyatha nenachu :( Anna kaalam bhathil sollum Savukku.. Yepperpatta atcheellam kuda thadam theriyama kaanama poiruku... evungalaam yemmathiram?!?! Naan unga kuralai antha kaalathoda muthal yethir kurala paakuren!! antha sevidarkaal kaathu kizhiyum varai entha kural oongi olikattum!! Vazhthukal!!

    ReplyDelete
  16. ithai ellam padikkum pothu en raththam

    kothikkirathu.intha arasaangam eppozhuthu

    ozhiyum?endru kaaththuk kondirukkiren.

    ReplyDelete
  17. Well-done savukku. Also could you please inform about "Santhana Kaadu to johnny johnkhan Road "

    ReplyDelete
  18. Free Newsletter Sign up Vote this article (3) (101) Ads by Google
    TCS is Hiring Now MonsterIndia.com
    Exp:0-5 yrs, Sal:25-100k Submit your Resume Free. Now

    டெல்லி: பாஜகவின் கடும் எதிர்ப்பை மீறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார்.

    இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர் என்று கூறி அவரது பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்தது.

    மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரதியுஷ் ஷாவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஆணையரை நியமிப்பது தொடர்பான தேர்வு கமிட்டி கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது.

    அந்தக் கமிட்டியில் பிரதமர் மன்மோகன் சிங் , உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்தப் பதவிக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பி.ஜே.தாமஸ் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சுஷ்மா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

    ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை முறைகேட்டில் தாமசுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மூடி மறைக்கவே, அவரையே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுஷ்மா குற்றம் சாட்டினார்.

    மேலும் தேர்வுக் கமிட்டி கூட்டத்திலேயே, பி.ஜே.தாமஸ் நியமனத்துக்கு எதிரான தனது குறிப்பையும் சுஷ்மா சுவராஜ் எழுதினார்.

    ஆனாலும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் பி.ஜே.தாமஸையே தேர்வு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.

    இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, மத்திய ஊழல் கண்காணிப்பு துறையின் புதிய ஆணையராக நேற்று மாலையே பி.ஜே.தாமஸ் பதவியேற்றுக் கொண்டார்.

    ReplyDelete
  19. அது என்ன சார் “Quoted text hidden"? எங்களுக்கும் தெரிஞ்சா நல்லது!

    ReplyDelete
  20. //டெல்லி: பாஜகவின் கடும் எதிர்ப்பை மீறி, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் நியமிக்கப்பட்டார்.// ஊழலே ஊழலுக்கு காவலா, எங்கே போய்க்கொண்டிருக்கிறது இந்தியத்துணைக்கண்டத்தின் தர்பார்.இவர்களெல்லாம் மனித விந்தில் உற்பத்தியாகி பிறந்து தாய்ப்பால் குடித்து வளரவில்லையா, குரூரமாக பதவி பணமே குறிக்கோளாக இருக்கிறார்களே இருதைய வெடிப்புக்கூட இவர்களை அணுக மறுக்கிறதே,

    ReplyDelete
  21. well savukku.you be care fully.

    ReplyDelete
  22. அம்மாவின் உண்மை விசுவாசி சவுக்கு,

    கவலை வேண்டாம், அம்மாவின் ஆட்சி வந்தால் இது போன்ற ஊழல் அதிகாரிகளை விரட்டி அடித்து விடுவார்.

    புரட்சித் தலைவி அம்மாவிற்கு உங்கள் சேவைகளை காணிக்கையாக்குங்கள்.

    ReplyDelete
  23. அம்மாவின் விசுவாசி அல்லது ஐயாவின் என்பது முக்கியமில்லை.தன்னை எதிர் நோக்கி நிற்கும் விபரீதாங்களை பெரிதுபடுத்தாமல் சவுக்கு மேற்கொள்ளும் பணி. இப்போ, இந்த நிமிடம்,மலைப்பாம்புக்கூட்டங்களின் வாயில் சிக்கி சாவின் தறுவாயிலிருக்கும் சமூகத்தின் ஆபத்தை,களையும் நோக்கோடு முரசறைவது எத்தனை பேரால் முடிந்திருக்கிறது. சமூக ஆபத்து களையப்பட்ட பின் ஐயாவோ,, அன்னையோ சரியாக நடந்துகொண்டால், சவுக்கின் முரசு பரணுக்கு போய்விடப்போகிறது நல்லது நடக்கும் போது உபத்திரவம் கொடுக்காமலிருப்பதே பெருத்த சமூகப்பணியல்லவா,

    ReplyDelete
  24. அந்த கீதா மேடம் பெர்சனல் Email ID கிடைக்குமா சார்

    ReplyDelete
  25. சவுக்கு மாதிரியான சமுக ஆர்வலர்கள் ஒன்று கஊடினால் மட்டுமே சிலர் தனிப்பட்ட லாபங்களுக்காக முன் எடுக்கும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும். இதில் வரும் செய்திகள் எந்தளவுக்கு உண்மை என்பது சாதரண குடிமகனான எனக்கு தெரியவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் உள்ளதை போல மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் எழுத்து சுதந்திரம் கண்டிப்பாக தேவை.

    அதுவே தான் ஒரு நல்ல மக்களாட்சிக்கும் எடுத்துகாட்டு.இது ஒரு நல்ல முயற்சி. மேலும் வலுபெற்று வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. அடி வாங்கி வாங்கி சிலையாகும் கல்லை போல், அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகளை தாங்கி தாங்கி நீங்கள் பலம் அடைவிர்கள். சளைக்காமல் சுழற்றுங்கள் உங்கள் சவுக்கை. நீங்கள் சொந்தமாக தொலைகாட்சி சேனல் ஆரம்பித்தால் நமது சவுக்கை சாதாரண மக்களின் இல்லம் வரை கொண்டு சேர்க்கலாம், அதான் நம்ப சீஎம் தாத்தா இலவச தொலைகாட்சி பெட்டி தந்திருக்கிறாரே.

    ReplyDelete
  27. இந்த உலகத்திலேயே அதிக அனானி கமெண்ட் போடப்பட்ட பிளாக் சவுக்காகத்தான் இருக்கும்.

    இப்படிக்கு
    அனானி

    ReplyDelete
  28. இந்தக்கருத்தை பின்னூட்டத்தில் பிரசுரிக்கிறீர்களோ தெரியவில்லை, இந்திய தண்டனைச்சட்டத்தின்படி ஒருவன் ஏற்கெனவே திருமணமாகியிருந்தால் அந்தப்பெண்ணை விவாகரத்து செய்யாமல் இன்னுமொரு பெண்ணை திருமணம் செய்யமுடியாது என அறிகிறேன், மனைவியானவள் மோசமான பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் (HIV,,VD,எயிட்ஸ்) அல்லது புத்தி சுவாதீனமற்று(பயித்தியம்) ஏதாவதொன்று அதற்கான சான்றுகளை உரிய திணைக்களத்தில் சமர்ப்பித்தபின் துறை சார்ந்த ஒப்புதலோடு இன்னுமொரு திருமணம் புரியலாமென்று சட்டம் கூறுவதாக ,விஜய் ரிவியில் சமீபத்தில் ஒரு நிகட்சியில் ஒரு சட்டத்தரணி கூறக்கேட்டேன், அந்த சம்பிரதயங்களை கடைப்பிடிக்காவிட்டால் குறைந்தது 7 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு ஆளாகவேண்டும் என அறிந்தேன், அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் சகலருக்கும் பொருந்தும் என நம்புகிறேன், விடையம் என்னவென்றால் இன்று முதலமைச்சராக இருக்கும் மு.கருணாநிதி அவர்கள், இறந்து போன முதல் மனைவி பத்மாவதி போக தற்போழுது நடைமுறையில் இரண்டு தாரத்தை வெளிப்படையாக வைத்திருக்கிறார், அவர்களுக்கு வாரிசுக்களும் இருக்கின்றன, ஒரு மானிலத்தின் மக்களுக்கு வழிகாட்டியாக அவர் இருப்பதால் சட்டப்படி எப்படி அவரால் இரண்டுதாரங்கள் வைத்திருக்க முடிந்தது, அரசியல்க்கட்சித்தலைவர்களுக்கு விதிவிலக்கு ஏதும் உண்டா, அல்லது பொதுமகன் ஒருவன் பொது நலன் கருதி அவர்மீது வழக்குபோடுவதற்கான சந்தற்பம் இருக்கிறதா தயவுசெய்து யாராவது இதற்கு பதிலளிக்க முடியுமா என அறிய விரும்புகிறேன்,

    ReplyDelete
  29. சூடு, சொரணையில்லாத ஜென்மங்களிடம் பேசித்தான் என்ன புண்ணியம் சவுக்கு..?

    இவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்பதற்காக நாம் மக்களுக்கு இது போன்ற உண்மைகளை தெரியப்படுத்தாமல் இருக்கக் கூடாது..! உங்களுடைய தைரியமான புலனாய்வுத் தகவல்களுக்கு எனது சல்யூட்..!

    ReplyDelete
  30. ஆளும் கட்சியின் சாதாரண வார்டு உறுப்பினரோ அல்லது ஒரு போலீஸ் பிசியோ மிரட்டினால் கூட ஐயோ எதுக்கு வம்பு என்று ஒதுங்கி போகும் இந்த நாட்டில் உயர் அதிகார வர்க்கங்களை காய்ச்சி எடுக்கும் உங்கள் தைரியம் யாருக்கும் வராது. உங்கள் எண்ணங்களை இணையம் தாண்டி தொலைகாட்சியில் பார்க்க ஆவலாக உள்ளேன். சட்ட சிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ளுங்க நண்பரே., பலமான அரசியல் அஸ்திவாரத்தை அமைத்து கொள்ளுங்கள். யாராலும் அசைக்கமுடியாத இடத்தில அமர்ந்து அதிகார சதிகாரர்களுக்கு எதிராக சவுக்கை சுழற்றுங்கள்.
    சவுக்குக்கு என்று ஒரு சேனல் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளதா?

    ReplyDelete
  31. சவுக்கு அவர்களுக்கு,
    நான் சவுக்கை தொடர்ந்து வாசிக்கும் நபர்களில் ஒருவன். தமிழ்நாட்டின் அவலநிலை கண்டு வேம்பும் சாதரண நபர்களில் ஒருவன்...உங்கள் பேர் அபிமானி!!! உங்கள் செயலை மிகவும் பரட்ட தக்க செயல்...தமிழ்நாட்டுக்கு அவசியமான ஒன்று...
    இதை முன்னரே எழுத நினைத்தேன், ஆனால் முடியவில்லை... இபோழுது எழுதுகிறேன்....
    காக்கி உடையில் காட்டுமிராண்டிகள். என்ற தலைப்பில் உங்கள் பதிவை படித்தேன். ககிகளின் நடவடிக்கைகள் கண்டிப்பாக கண்டிக்கவேண்டிய செயல், அதில் வெற்றியையும் அடைத்தோம். ஆனால் நீங்கள் ஒரு தலை பட்சமாக எழுதியதாக நினைக்கிறன். அசோக் குமார் பேருந்தில் செய்த கலாட்டவை கண்டிக்கவே இல்லையே ஏன்? அதனால் தென் அவர் காவல் நிலையத்தில் ஒப்டைக்கபாட்டர். அவர் பெறுதில் வந்தா இரு வெளிநாட்டு பயணிகளை அதிக தொந்தரவு செய்தார் என்று சொல்லபடுகிறதே அதை பற்றி நீங்கள் எழுதவில்லையே?? பயன்சிட்டு எடுக்க மறுத்தார் என்று சொல்லபடுகிறதே? அவரை அந்த பேருந்து நடத்துனர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தால் அந்த பேருந்துக்கு மறைமுக மிரட்டல் விடப்பட்டதே அந்தே பேருந்து அடித்த ஒரு மாதம் அந்தே வழி தடத்தில் இயக்கம் முடியவில்லயே!! அதை பற்றி ஏன் எழுதவில்லை ???
    பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்!!!

    ReplyDelete
  32. Dear savukku what happen to u? Anything happened wrong? your silence is making us to worry.

    ReplyDelete
  33. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  34. Vanakkam . . .
    thangalai thodarbu kolla minnajal ?
    udan anppavum
    Jay

    ReplyDelete
  35. By seeing all these I think by 2012 as like movie 2012 The Earth want to clean by itself. A new generation want to emerge. I hope we peoples living now wont give a pleasant environment, good relationship with others, truth full life, real knowledge (not the education but the knowledge.

    I don't know when & how these types of thoughts (budthy) came to humans.

    For what we are educating we are all forgotten about that. We know to put our dusts in a durst bin but we wont do that.

    Drinking cool drinks and kick it in a road (as style). We are all doing small mistakes to our possible extend and the peoples in power doing mistakes to their extend.

    At last see booma dhevi will going to laugh we all will do to mayanam

    ReplyDelete