Monday, August 11, 2014

கருணாநிதி ஒரு நேர்மையாளர்.

நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள், தன்னுடைய இளையதளத்தில், கருணாநிதியின் சொத்துக்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார். 




அந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை விட்டு, பதில் கேள்வி கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 

மார்கண்டேய கட்ஜுவின் அறிக்கைக்கு
கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

திரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள், கழகத் தலைவர் கலைஞர் அவர்களை, தனிநபர் விமர்சனமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன்பு, இந்தக் கேள்விகளை கேட்க திரு.கட்ஜுக்கு எள் முனையளவாவது தகுதி உண்டா? என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பொது அமைப்பான நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்து ஓய்வு பெற்று, இன்று பத்திரிக்கை சுதந்திரத்தையும், உண்மைத் தன்மையும் காக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு, வருணாசிரம தர்மத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து பாகுபாடு பார்த்து அவதூறு சேற்றைக் கொண்டு தனிநபர் தாக்குதலில் நீங்கள் ஈடுபடலாமா ?



கழகத் தலைவர் கலைஞர் அவர்கள், "நீதிபதியின் பதவி குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று தாங்கள் கூறிய கருத்தை விவாதப்பொருளாக ஆக்க விரும்பவில்லை" என்று கூறியதற்குக் காரணம் - நீங்கள் வகித்த மேன்மைதங்கிய பொறுப்புகளே ஆகும். ஆனால் அந்த மேன்மைதங்கிய பொறுப்புகளில் இவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட ஒரு மனிதர் இருந்துள்ளார் என்று நினைக்கும்பொழுது உள்ளபடியே வெட்கப்படுகிறோம்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை, தமிழினத்தின் பாதுகாவலரை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாய் விளங்கும், தலைவர் கலைஞரைப் பார்த்து கேள்வி கேட்கும் நீங்கள் உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் நின்று நீங்கள் கேட்ட கேள்விகளை உங்களுக்கு பொருத்திப் பாருங்கள்.

தி.மு.கழகமும், அதன் தலைமையும் தெளிவாக தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பின்பும், திரும்பத் திரும்ப கழகத் தலைவர் குறித்த தனிமனித தாக்குதலை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. தனக்கு கோபாலபுரம் இல்லத்தைத் தவிர வேறு சொத்துகள் இல்லை என்றும், தன் காலத்துக்கு பிறகு தன் குடும்பத்தாரின் ஒப்புதலோடு அதனை பொதுமருத்துவமனையாக மாற்ற விருப்பம் தெரிவித்து அதனை மக்களுக்கு எழுதி வைத்து விட்டேன் என்று பதில் கூறியதற்கு பின்னரும், இப்படி தனிநபர் தாக்குதலை தொடுப்பது தரமற்ற, உள்நோக்க செயல். நீங்கள் கேட்டுள்ள எல்லாக் கேள்விகளுக்கும், வருமான வரித்துறை தெளிவான பதிலையும் விளக்கத்தையும் தரும் என்ற அளவோடு, நீங்கள் குற்றம்சாட்டியுள்ள தலைவரின் பிள்ளைகள், பொது வாழ்வில் சிறப்போடு  செயல்பட்டு வரும் நபர்கள். அவர்கள் வருடந்தோறும் வருமான வரி செலுத்தி, அவர்களுக்கான வரும் வருமானத்திற்கான வரியை மிக சரியான நேரத்தில் செலுத்தி, ஒரு நல்ல குடிமகன்களாக செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் மீது இப்படி அடிப்படை அறிவு கூட இல்லாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபவது ஏன் ?

மீண்டும் மீண்டும் தலைவர் கலைஞர், "தங்களின் கருத்தை விவாதப் பொருளாக மாற்ற வேண்டாம்" என்று கூறியதற்குப் பிறகும் நீங்கள் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது எதற்காக? உங்களை தூண்டிய சக்தி எது? அதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலை என்ன?

1) தாங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபொழுது உங்கள் மீது வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு இன்னமும் பதில் கூற முற்படவில்லை.

2) சாதி ரீதியிலான அடக்குமுறை, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உங்களால் இன்று வரை பதில் கூற முடியவில்லை.

3) நீங்கள் நீதிபதியாக இருந்தபொழுது உங்கள் சொத்துக் கணக்கு என்ன?

4) தற்பொழுது வகித்துவரும் பிரஸ் கவுன்சில் சேர்மன் பொறுப்பில் இருக்கும் தங்களின் சொத்து மதிப்பு என்ன?

5) உங்கள் தாத்தா கைலாஷ்நாத் கட்ஜுவின் சொத்து மதிப்பு என்ன ?

6) உங்கள் தந்தை எஸ்.என். கட்ஜுவின் சொத்து மதிப்பு என்ன ?

7) உங்கள் மனைவி ரூபா அவர்களின் சொத்து மதிப்பு என்ன ?

8) உங்கள் மகள் மற்றும் மருமகனின் சொத்து மதிப்பு என்ன ?

9) உங்கள் மகன் மற்றும் மருமகளின் சொத்து மதிப்பு என்ன ?

10) நீங்கள் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தின் சொத்து மதிப்பு என்ன ?

11) உங்கள் பண்ணை இல்லத்தில் நடப்பது என்ன? பக்கத்திலேயே வேறு ஒரு பெண்ணுக்கு பண்ணையில்லம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப் படுகிறதே! அந்த சொத்தின் மதிப்பு என்ன? தங்களின் அறிக்கைகளின் பின்னணி அந்தப் பெண்தான் என்பது உண்மையா ?

12) நீங்கள் புதுடில்லி நீதிமன்றத்திற்கு சென்றபொழுது சென்னையில் இருந்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் வேறு காரணங்கள் சொல்லி அவரை உங்களோடு இரண்டு மாதம் தங்க வைத்ததாக சொல்லப்படுகிறதே !
அதற்கான செலவை யார் செய்தது ? உங்களை ஆட்டிப் படைக்கும் அரசியல் சக்தியா ?

மேலும் உங்கள் மாமா திரு. பி.என்.கட்ஜு அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்துக்கள் எவ்வளவு? இப்பொழுது உங்கள் குடும்பத்திற்கு உங்கள் மாமா மற்றும் உங்கள் உறவினர் சசிதரூரின் முன்னாள் மனைவியின் குடும்ப சொத்துகள் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? இப்படி பல கேள்விகளை உங்கள் முன் வைக்கிறோம்.

திரு. கட்ஜு அவர்களே நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன ?
தலைவர் கலைஞர் குறித்து தாங்கள் கூறியவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
திரும்பத் திரும்ப தலைவர் கலைஞர் அவர்களின் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தும் அவதூறு கருத்துகள் பேசியும் வந்தால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கிறேன்.

"அண்ணா அறிவாலயம்" ஆர்.எஸ். பாரதி,
சென்னை - 18. அமைப்புச் செயலாளர்,
நாள் : 11-8-2014. தி.மு.க.

5 comments:

  1. சபாஷ், சரியான போட்டி.

    ReplyDelete
  2. நீ ஏண்டா இப்படி சொத்து சேத்தனு கேட்டா, அதுக்கு மட்டும் பதில் சொல்லுடா பிக்காளிபயலே... கட்டுமரத்த விட கச்சு ரொம்ப மேல்.

    ReplyDelete
  3. Let both of them answer each other's 12 questions... I am sure both wont do :-)

    ReplyDelete
  4. kalaignar avargale unga property lista release pannunga.

    ReplyDelete
  5. Nobody can get a prompt reply from M.K. for any of his curuption.

    If you ask, he will tell some thing like Nasa, USA or Mars Mangalyan or Bramin or some thing.


    ReplyDelete