சவுக்கின் கைதுக்கு முன்பு, தங்களிடம் சவுக்கு எழுதிய செம்மொழிப் பாடல், பதிவும், மற்றொரு பதிவும் காண்பிக்கப் பட்டு, சவுக்கு ஒரு தேசத் துரோகியாக சித்தரிக்கப் பட்டதாக சவுக்கு அறிகிறது.
தாங்களும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில், அந்தப் பதிவுகளை ரசித்திருப்பீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது. இத்தனை காலமாய் தங்களை விமர்சித்து சவுக்கு எழுதும் போதெல்லாம் அமைதியாக இருந்த ஜாபர் சேட், இப்போது சவுக்கைப் பற்றி தங்களிடம் கூறக் காரணம் என்று யோசித்தீர்களா ?
ஜாபர் சேட்டின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் சவுக்கு ஏற்றியதால் தான்.
உங்களை விமர்சித்த பதிவை காட்டினாரே ? இவர் எத்தனை இடத்தில் சொத்து வாங்கியுள்ளார் என்ற பதிவை காட்டினாரா ? காட்டமாட்டார்.
அய்யா என்னா அழகா இருக்கார் பாருங்க. பெண் சிங்கம் 2ம் பார்ட்ல ஹீரோ ஆக்கிடுங்கய்யா
முதல்வர் அவர்களே.. உங்களை அரசியல் சாணக்கியர் என்று கூறுகிறார்கள். மிகத் திறமையாக எதிரிகளைக் கையாண்டு சாணக்கியத்தனத்தோடு செயல்படுவதில் தாங்கள் வல்லவர் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அப்படிப் பட்ட சாணக்கியரான நீங்கள், ஒரு சகுனியை கூடவே வைத்துக் கொண்டு, அந்த சகுனியை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பதுதான் மிகுந்த வேதனையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. உங்கள் உடனிருப்பவர்கள், உங்களிடம் உண்மையைச் சொல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், சாதுர்யம் மிக்க நீங்கள், இந்த ஜாபர் சேட் விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
இன்று உங்கள் கண்களாகவும், காதுகளாகவும் இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் இந்த ஜாபர் சேட் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
இவர் பணியில் சேர்ந்த நாள் முதலாகவே ஒழுக்கமாக இருந்தது கிடையாது முதல்வர் அவர்களே. முதல் போஸ்டிங்கில், ஏஎஸ்பி யாக, கோவையில் இவர் நியமிக்கப் பட்டார். அப்போதே, அங்கே இருந்த ஒரு பெண் காவலருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அந்தப் பெண் காவலர், ஜாபரை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், மறுத்தால் புகார் கூறப் போவதாகவும் கூறியதை அடுத்தே, ஜாபர் அவசர அவசரமாக திருமணம் செய்ததாக கோவை வட்டாரங்கள் கூறுகின்றன. பணியில் சேர்ந்த முதல் ஆண்டே தனது வேலையை காட்டத் தொடங்கியவர்தான் இந்த ஜாபர்.
1996 முதல் 2000ம் ஆண்டு வரை, தாங்கள் முதல்வராக இருந்த பொழுது ஜாபர் சேட் தங்களது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
அப்போதெல்லாம், இப்போது நடப்பது போன்று பல்வேறு விழாக்கள் தங்களுக்கு கிடையாது. காலையில் தலைமைச் செயலகம் வந்தால், மாலையில் அலுவலகம் முடியும் வரை அங்கேதான் இருப்பீர்கள். பாதுகாப்புப் பிரிவு எஸ்பி என்பதால், ஜாபருக்கு தாங்கள் எத்தனை மணிக்கு கிளம்புவீர்கள் என்ற விபரம் நன்கு தெரியும்.
அதனால், ஒரு ஜிப்ஸி ஜீப்பை எடுத்துக் கொண்டு, தானே அதை ஓட்டிச் சென்று, நேராக சென்னை விமான நிலையத்தின் சர்வதேச இறங்கு முனையின் விஐபி நுழைவாயிலுக்குச் செல்வார். அங்கே, இவரது நண்பர்கள் எடுத்து வரும் பொருட்களை கஸ்டம்ஸ் சோதனையின்றி, தன்னுடைய ஜீப்பிலேயே ஏற்றி அவர்கள் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பாராம். இதன் மூலமாக, சுங்க வரி ஏதும் செலுத்தாமல் இவர்களது பொருட்கள் வந்து சேரும்.
திருவான்மியூர் ப்ளாட் ஒரு சதுர அடி, 9000 ரூபா ஒரு தரம், ரெண்டு தரம்....
இதற்கான பிரதி பலனாக, இவருக்கு அரசு விருப்புரிமை கோட்டாவில் ஒதுக்கப் பட்ட, சென்னை முகபேர் ஏரித் திட்டத்தில் 10வது குறுக்குத் தெருவில் உள்ள மனையில், ஒரு பிரம்மாண்ட பங்களா கட்டினார் தெரியுமா ?
அந்த வீட்டை இவர் பொருள் எடுத்து வந்துக் கொடுத்த, செங்கல் சூளை முதலாளிகள் செங்கல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் இலவசமாக கொடுத்து, அந்த வீட்டை கட்டிக் கொடுத்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அவ்வாறு கட்டிய வீட்டில் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அதை 70 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டது தங்களுக்குத் தெரியுமா ?
பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாகவே இருந்து இவர் எப்படி சம்பாதித்தார் என்று பல போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் புதிராகவே உள்ளது. இப்படித்தான் சம்பாதித்தார்.
தங்களின் நள்ளிரவு கைதில் இவர் வகித்த பங்கு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?
உங்களின் பாதுகாப்பு அதிகாரியாக நான்கு ஆண்டுகள் இருந்த அனுபவத்தால் இவரிடம் தான், எந்த இடத்துக்கு எந்த போலீஸ் அதிகாரியை அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.
உங்களின் நள்ளிரவு கைதின் போது இவருக்கு ஒதுக்கப் பட்ட இடம், முர்ரேஸ் கேட் ரோடு முனை. ஆனால், அங்கே இவர் நிற்காமல், ஆபாஷ் குமாரை நிற்க வைத்து விட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் சென்று ஒளிந்து கொண்டார்.
பிறகு, அங்கே திமுகவினர் வரப் போகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும், ஓமந்தூரார் மாளிகைக்கு சென்று விட்டார்.
இந்தப் புன்னகை என்ன விலை ? (ஒரு சதுர சென்டி மீட்டர் 10,000 ரூபா)
உங்கள் கைது பற்றி முன் கூட்டியே தகவலைச் சொன்னது தான்தான் என்று உங்களிடம் புளுகியிருப்பார். ஆனால் சரியான நபரிடம் விசாரியுங்கள், அந்தத் தகவலை உங்களிடம் சொன்னது ஜாபர் சேட் இல்லை. சவுக்கு அந்த நபரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.
நள்ளிரவுக் கைதுக்குப் பின் என்ன நடந்தது தெரியுமா ? ஜாபர் சேட்தான் அந்தத் தகவலை உங்களுக்கு முன் கூட்டியே சொல்லி விட்டார் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவு தகவல் கூறப்பட்டது.
உடனடியாக, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு டிஐஜியாக திருச்சிக்கு நியமிக்கப் பட்டார் ஜாபர் சேட்.
ஜாபர் சேட்டின் மனைவி பர்வீனும், உங்கள் நள்ளிரவு கைதின் நாயகன் முத்துக்கருப்பனின் மனைவி மல்லிகாவும் இணைந்தே ப்யூரிட்டா மினரெல் வாட்டர், பால் பண்ணை தொழில்களில் ஈடுபட்டு வந்தார்கள். அதனால் இவர்கள் இருவருக்கும் மிகுந்த நட்பு உண்டு.
உங்களை நள்ளிரவில் கைது செய்த பின், முத்துக் கருப்பன், ஒரு சக்கரவர்த்தியைப் போல இருந்தார் தெரியுமா ? இவர் வந்தால் மட்டும் செல்வி.ஜெயலலிதா உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கொடுப்பார்.
இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சென்னைக்கே மாறுதல் வாங்க வேண்டும் என்று விரும்பிய ஜாபர் சேட் நேராக முத்துக் கருப்பன் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்றாடியிருக்கிறார். முத்துக் கருப்பனிடம், என்னுடைய மகள் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறாள், அவள் நலன் கருதியாவது எப்படியாவது சென்னைக்கு மாறுதல் வேண்டும் என்று மன்றாடியிருக்கிறார்.
மிகவும் தயங்கிய முத்துக் கருப்பன், ஜாபர் சேட்டும் அவரது மனைவியும் கெஞ்சிய கெஞ்சலைப் பார்த்து மிகவும் தயங்கிய படியே முதல்வரிடம் பேசுவதற்கு சம்மதித்திருக்கிறார்.
முத்துக்கருப்பனின் இந்த சிபாரிசைப் கேட்டு மிகவும் கோபம் அடைந்த ஜெயலலிதா, முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார்.
உங்களின் நள்ளிரவு கைதுத் தகவலை முன் கூட்டியே சொன்னது ஜாபர் சேட்தான் என்று தனக்கு உறுதியான தகவல் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இதை மறுத்த முத்துக் கருப்பன், தகவலை வெளியிட்டதாக ஒரு அதிகாரியின் பெயரை கூறுகிறார். இதைக் கேட்டு சந்தேகம் தெளிந்த ஜெயலலிதா, பழைய மாறுதல் ஆணையை ரத்து செய்து விட்டு, ஜாபர் சேட்டை சென்னையில் ஆயுதப் படை டிஐஜியாக நியமித்தார் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?
இப்படியொரு உதவியை முத்துக்கருப்பனிடம் பெற்றுக் கொண்ட ஜாபர் சேட், இன்று முத்துக் கருப்பன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டாலும், முத்துக் கருப்பனை விட பணியில் இளைவர்களான 13 பேர் கூடுதல் டிஜிபிக்களாக ஆகி விட்ட நிலையில், இவரின் பதவி உயர்வு தொடர்பான கோப்பு கையெழுத்து ஆகாமல் நிறுத்தி வைத்திருப்பது ஜாபர் சேட்தான் என்பது உங்களுக்கு தெரியுமா முதல்வர் அவர்களே ?
முந்தைய ஆட்சியில் ஒரு துணை முதல்வரைப் போல செயல்பட்டு, இன்று வரை எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா உங்கள் அரசை மைனாரிட்டி அரசு என்று அழைப்பதற்கு காரணமான சிவனாண்டியையே மன்னித்து நல்ல பதவி கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், முத்துக் கருப்பனுக்கு பதவி உயர்வு வழங்காததற்குக் காரணம், அவர் ஒரு தலித் என்பதால் என்று அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் பரவலான பேச்சு உங்களுக்குத் தெரியுமா முதல்வர் அவர்களே ?
தலித் வீட்டில் பெண் எடுக்கும் அளவுக்கு பெரிய மனது கொண்ட நீங்கள், இப்படி ஒரு அவப்பெயருக்கு ஆளாகலாமா ?
2007ம் ஆண்டு முதல் பல்வேறு வேலைகள் காரணமாக 50 தடவைகளுக்கும் மேல் விமானத்தில், முதல் வகுப்பில் டெல்லி வந்திருக்கிறார் ஜாபர் சேட்.
ஒவ்வொரு முறை பயணத்திற்கும், உளவுத் துறையின் ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுக்கப் பட்டதை தாங்கள் அறிந்திருந்தாலும், இந்தத் தொகை இது வரை மீண்டும் ரகசிய நிதிக்கு வரவு வைக்கப் படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா முதல்வரே ? ஒரு முறை முதல் வகுப்பில் டெல்லி செல்வதற்கு ஏறக்குறைய 20,000 ஆகும் தெரியுமா முதல்வர் அவர்களே ?
மாதந்தோறும் இவர் தனது வீட்டு செலவுக்காக ரகசிய நிதியிலிருந்து எடுக்கும் ஒரு லட்ச ரூபாயையும், அறையை புதுப்பிப்பதற்காக கடந்த ஆண்டு எடுத்த ஐந்து லட்ச ரூபாயையும், இந்த ஆண்டு செலவிட்ட ஐந்து லட்ச ரூபாயையும் இவருக்கு வவுச்சர் போட்டு வாங்கிக் கொடுப்பது உளவுத் துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் ராஜ்குமார் என்ற டிஎஸ்பி என்பது தங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?
இந்த ராஜ்குமார், ஜாபர் சேட் அடிக்கும் கொள்ளையில் தானும் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா ?
முதலமைச்சராகிய நீங்கள் கையெழுத்து போட்டு ஒப்புதல் தராமலேயே, பல பொருட்களை ரகசிய நிதியிலிருந்து வாங்கியிருக்கிறார் ஜாபர் சேட் தெரியுமா முதல்வரே ?
சமீபத்தில் இவர் தனது அறையில் வாங்கிப் போட்டிருக்கும் மேசை மட்டும் ஒரு லட்ச ரூபாய். உளவு சேகரிப்பதற்காக ரகசிய நிதி கொடுத்தீர்களா அறையை சொகுசு படுத்துவதற்காகவா ?
ஒவ்வொரு முறை புதுதில்லி செல்லும் போதும், இவரை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல பெரும் செல்வந்தர்களின் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் வருகின்றன என்பதை அறிவீர்களா முதல்வரே ?
50 தடவைகளுக்கு மேல் புது தில்லி சென்றுள்ள ஜாபர் சேட், ஒரு முறை கூட நீங்களே தங்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது இல்லை. ஒவ்வொரு முறையும் நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவார் என்று கூறுகிறார்கள்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகிய நீங்களே தமிழ்நாடு இல்லத்தில் தங்குகையில், உங்களிடம் ஊதியம் பெறும் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கும் அளவுக்கு இவருக்கு செலவு செய்யும் நபர்கள், இவரிடம் என்னென்ன சலுகைகளை எதிர்ப்பார்ப்பார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல.
இந்த சலுகைகளைப் பெறுவதற்காக இவர் உங்களைப் பற்றியே உளவு சொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம் ?
இவர் மனைவி பெயரில் திருவான்மியூரில் கட்டி வரும் நான்கடுக்கு மாளிகையைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால் இது தாங்கள் வழங்கியது தானே ? ஆனால், ஈஞ்சம் பாக்கத்தில் இவர் 2.5 கிரவுண்ட் இடத்தை ஜெய்சங்கர் என்ற பினாமி பெயரில் வாங்கியதை தாங்கள் அறிவீர்களா ?
இந்த இடத்தை இவர் சென்னை தேவி தியேட்டர் அருகில், பால்ஸ் என்ற காபரே நடனம் நடத்தும் நபரிடம் இருந்து வாங்கியிருக்கிறார் என்பது உங்களுக்கு உபரித் தகவல்.
இது தவிர பழைய மகாபலிபுரம் சாலையில் க்ளாசிக் ஃபார்ம்ஸ் என்ற இடத்தில் மேலும் 2.5 க்ரவுண்ட் இடத்தை பினாமி பெயரில் வாங்கியிருக்கிறார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ?
உங்கள் பார்வையில் இவரை நல்ல அதிகாரி என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு இட்ட வேலை எதையாவது ஒழுங்காகச் செய்திருக்கிறாரா இது வரை ?
ஏற்கனவே உளவுத் துறைக்கு சிதம்பரசாமி என்ற ஒரு அதிகாரி இருக்கையில் இவரை தாங்கள் நியமித்ததே வைகுண்டராஜனை கைது செய்வதற்காகத் தானே ? செய்தாரா இது வரை ? கைது செய்யாமல் இருப்பதற்காக வைகுண்டராஜனிடம் ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, உங்களிடம் சாக்கும் போக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட அதிகாரியை நீங்கள் எப்படி இன்னும் நம்புகிறீர்கள் ?
உங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இருக்கும் இவரை எப்படி நீங்கள் இந்தப் பதவியில் வைத்திருக்கிறீர்கள் ? உமாசங்கர் ஐஏஎஸை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று இவர் செய்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டீர்களே ?
தேர்தல் நடக்க இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவாகவே உள்ள சூழ்நிலையில், தேவேந்திரக் குல வேளாளர் என்று அழைத்துக் கொள்ளும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உமாசங்கரை இடைநீக்கம் செய்து எதற்காக இப்படி அந்நியப் படுத்தினீர்கள் ? இது ஒரு சரியான அரசியல் முடிவுதானா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
தினமும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உமாசங்கர் பணி இடைநீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று வருவதை தாங்கள் அறிவீர்களா ? உமாசங்கருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதற்காக ஒரு ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தால் இந்தப் பிரச்சினையை மூடி விடலாம் என்று நினைக்கிறார் ஜாபர் சேட். ஆனால் தலித்துகள் அன்னியப் படுத்தப் படுவதாக உணர்ந்தால், அதற்கான விளைவுகள் தேர்தலில் எதிரொலிக்கும்.
இந்த தேர்தல் ஆண்டில் உமாசங்கரின் இடைநீக்கம் ஒரு சரியான நடவடிக்கைதானா முதல்வர் அவர்களே. இந்த நெருக்கடியான சூழலுக்கு யார் காரணம் ? உங்களுடன் இருக்கும் சகுனிதானே ?
சவுக்கு வாசகர்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் ஒரு ஐயம், இந்த ஜாபர் சேட்டின் மேல் சவுக்குக்கு அப்படி என்ன கோபம் ? தனிப்பட்ட கோபம் இருக்கிறதா என்பது.
ஜாபர் சேட்டை சவுக்கு பார்த்தது கூட கிடையாது. ஜாபர் சேட்டின் எதிரிகள் சவுக்கை தூண்டி விடுகிறார்கள் என்று கூட ஜாபர் சேட் உங்களிடம் தகவல் சொல்லக் கூடும். தனிப்பட்ட முறையில் எதிரியாக கருதும் அளவுக்கு ஜாபர் சேட்டுக்கும், சவுக்குக்கும் அவருடைய தொழில் பங்குதாரர்கள் போல எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் ஜாபர் சேட் மீது கடும் கோபம், மாறாத ஆத்திரம் உண்டு. ஏன் தெரியுமா ?
அக்டோபர் 2008 முதல் ஈழத்தில் போர் உக்கிரமாக இருந்த போது, தமிழகம் வழியா இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்பதை தாங்கள் அறிவீர்களா என்பது சவுக்குக்கு தெரியாது. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஏராளமான மருந்துகள் கடத்தப் பட்டன.
பேண்டேஜுகள், உயிர்காக்கும் மருந்துகள், சலைன்கள், இதயத்தை இயங்க வைக்கக் கூடிய ஸ்டீராய்டுகள் போன்றவையே அவை.
நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில் உங்கள் ஜாபர் சேட் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?
இது போல மருந்து கடத்திச் செல்ல முயன்ற ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் இலங்கைக்கு சாட்டிலைட் போன்கள் கடத்த முயன்றார்கள், லேப்டாப்புகளை கடத்த முயன்றார்கள் என்று வழக்கு போட்டு சகட்டு மேனிக்கு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.
இந்திய இறையாண்மையை காக்கும் பொறுப்பு உங்களுக்கு, சோனியாவை விட அதிகம் உள்ளது என்றாலும், இந்த மருந்துகள் இலங்கையை சென்று அடைந்திருந்தால் சில ஆயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் தானே ?
சவுக்கு ஆயுதம் கடத்துபவர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. மருந்து கடத்துபவர்களை, அது சட்ட விரோதமாக இருந்தாலும் சில ஆயிரம் உயிர்களை காக்க பயன்படுகிறது என்ற போது கண்டும் காணாமல் இருந்திருந்தால்தான் என்ன ?
புலிகள் இயக்கத்துக்கு பணமும், ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது இதே தமிழ்நாடு தானே ? உங்களை விட இந்திய இறையாண்மையில் நம்பிக்கை உள்ள, உங்களால் தியாகத் திருவிளக்கு என்று அன்போடு அழைக்கப் படும், சோனியாவின் மாமியார் செய்யாததையா நீங்கள் செய்து விடப் போகிறீர்கள் ?
வழக்கு போடுவதிலாவது நேர்மையாக இருந்தாரா ஜாபர் சேட். கைப்பற்றப் பட்டவை மருந்துகளாக இருந்தாலும், அவற்றையெல்லாம் கணக்கில் காட்டாமல், வெறும் சாட்டிலைட் போனை மட்டும் வைத்து வழக்கு போடப்பட்டது தெரியுமா ?
இது போன்று வழக்கு போட்டு தள்ளிய நேர்வுகளிள் ஒன்று இதயத்தை உறையச் செய்யக் கூடியது. புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தில் இறுதி யுத்தத்தின் போது வாங்கிக் கொடுத்து அனுப்பிய 250 ரத்த உறைகளை கொடுத்து அனுப்புகிறார்கள்.
இந்த 250 ரத்த உறைகளும், குண்டுக் காயம் பட்டு, குற்றுயிரும் குலையிருமாக ஈழத்து வீதிகளில் கிடக்கும் தமிழ் உயிர்களைக் காப்பதற்காக கொடுத்து அனுப்பப் பட்டவை. தமிழகம் வந்தால் பிடிபடும் அபாயம் உண்டு என்பதை அறிந்தும், ரத்த உறைகள் இந்த நெருக்கடியான நேரத்தில் அனுப்பப் படும் என்பதை நம்பி அனுப்பப் பட்டன.
ஜாபர் சேட் பொறுப்பாக உள்ள க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த 250 ரத்த உறைகள் எடுத்து வந்த நபரை இடைமறித்து, அவர் சாட்டிலைட் போனை ஈழத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாக கைது செய்து, ரத்த உறைகளை கணக்கில் காட்டாமல் குப்பையில் கொட்டி அழித்த செய்தியை தாங்கள் அறிவீர்களா ?
இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த க்யூ பிரிவு காவலர் ஒருவர், மனசாட்சி கேட்காமல் ஜாபர்சேட்டை காது கூசும் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு சொன்ன தகவல் இது.
இது மட்டும் அல்ல… … …. இந்த ரத்த உறைகளை எடுத்து வந்த நபரிடமிருந்து 60 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டதே, அது ஏன் வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்கள் ஜாபர் சேட்டிடம் கேளுங்கள் அய்யா … …. இந்த வழக்கு பற்றிய ஒரு தனிப் பதிவு விரைவில் வரும்.
அரசாங்கப் பணத்தை திருடுவது பத்தாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்களின் வியர்வையில் வந்த பணத்தையும் திருடி விட்டார் இந்த விஷக் கிருமி. இப்படியெல்லாம் திருடினால்தானே, திருவான்மியூரிலும், ஈஞ்சம்பாக்கத்திலும் வீட்டு மனைகள் வாங்க முடியும்.
நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பீர்கள். உங்கள் கீழ் பணியாற்றும் அதிகாரி ஈழத் தமிழர்களுக்கான ரத்த உறைகளை குப்பையில் கொட்டி அழிப்பார் ? என்ன கொடுமை அய்யா இது ? நம்மை தமிழர் என்று நாம் சொல்லிக் கொள்ளும் தகுதி இருக்கிறதா நமக்கு ?
இந்த ரத்த உறைகளை எடுத்து வந்து க்யூ பிரிவு காவல்துறையில் பிடிபட்ட நபர், இன்னும் தமிழக சிறைகளில்தான் இருக்கிறார். முதல்வராகிய தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து, இன்றே அந்த நபரை நேரடியாக சந்தித்து தாங்கள் விசாரித்து உண்மையை அறிய முடியும்.
இப்படிப்பட்ட நபரை நீங்கள் எப்படி இன்னும் நம்பி தமிழகத்தின் முக்கியப் பொறுப்பை கொடுத்து இருக்கிறீர்கள் அய்யா ? 1996 முதல் 2001ம் ஆண்டு வரை உளவுத் துறையில் பணியாற்றிய அதிகாரிகள், உளவுத் துறை சொல்லும் தகவல்களை, தாங்கள் கட்சிக் காரர்களை வைத்து தனியே விசாரித்து உளவுத் துறை அதிகாரிகள் சொல்லும் தகவல்களின் உண்மைத் தன்மையை சரி பார்ப்பீர்கள்.
உளவுத் துறை கொடுத்த தகவல்கள் சரியில்லாமல் இருந்தால், வறுத்து எடுத்து விடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.
அப்படிப் பட்ட நிர்வாகத் திறமை வாய்ந்த நீங்களா இந்த சகுனியை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ?
இந்த ஊழல் பேர்விழி மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக புகார் மனு நேற்று அனுப்பப் பட்டது.
உள்துறைச் செயலருக்கும், தலைமைச் செயலருக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பப் பட்ட அந்த புகார் மனு, தங்கள் பார்வைக்கு வைக்கப் படுமா என்பது சவுக்குக்கு தெரியாது.
அதனால், அந்த புகார் மனுக்கள் தங்கள் பார்வைக்காக இங்கேயே வழங்கப் படுகின்றன.
இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை உயர்நீதிமன்றம் செல்லும் சூழலுக்கு தள்ள மாட்டீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது.
வாழ்த்துக்கள் அய்யா.
வணக்கம்.
சவுக்கு
உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?
Keep it UP?
ReplyDeleteஉங்கள் சேவை நாட்டுக்கு தேவை
well.but savukku need to bring out WHAT he did,WHEN he did,WHERE he did against EALA TAMILS in tamilnadu.can you do?
ReplyDeleteஇதை கேக்குரப்பொவே வயிறு எரியுதய்யா...250 ரத உறைகளை பிறருக்கு பயன் படுத்தவாவது செய்திருக்கலாம்...நாம் தமிழர் இயக்க நண்பர்களே கேட்டுக்கங்கப்பா..ஜாபார் சேட் போல இன துரோகிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூரத்தில் இருக்கிற ராஜபக்செவையும் ,கருணாவையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்..இதனை பேரை கொன்ற பாவம் சும்மா விடுமா?அல்லா தான் கண் திறக்கனும்..
ReplyDeleteஇதை கேக்குரப்பொவே வயிறு எரியுதய்யா...250 ரத்த உறைகளை பிறருக்கு பயன் படுத்தவாவது செய்திருக்கலாம்...நாம் தமிழர் இயக்க நண்பர்களே கேட்டுக்கங்கப்பா..ஜாபார் சேட் போல இன துரோகிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூரத்தில் இருக்கிற ராஜபக்செவையும் ,கருணாவையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்..இத்தனை பேரை கொன்ற பாவம் சும்மா விடுமா?அல்லா தான் கண் திறக்கனும்...
ReplyDeleteஉங்கள் துணிச்சலை மெச்சுகிறேன், மிக கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது ,
ReplyDeleteஒரு தீய சக்தியை பற்றி இன்னொரு தீய சக்தியிடம் புகார் கூறுவது சரி என்று எனக்கு படவில்லை...இருந்தாலும் பொறுத்து இருந்து பார்போம்...
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி....
சரி........இங்கே பிரபா படம் எதுக்கு?
ReplyDeleteஇளையோர்களின் மனக்குமுறலை உங்கள் எழுத்துக்களின் வழியாக வெளிப்படுத்துகிறீர்கள்.
ReplyDeleteJaffer seit oru mullamari thaan. Adharkaga ulaga maga thirudan kitta poi justice edhiparkalama??
ReplyDeleteசவுக்கு அவர்களுக்கு,
ReplyDeleteசின்ன திருடனை பெரிய திருடனிடம் காட்டி கொடுக்கிறிர்கள்... பார்ப்போம், பெரிய திருடனுக்கு கோவம் வருகிறதா என்று...
//நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில்//
ReplyDeleteI cant accept this lines!!!
நண்பரே.... உங்கள் தொடர்புகள் மூலம் இப்பதிவை முதல்வரின் நேரடிப்பார்வைக்கு கொண்டு செல்ல முயற்ச்சியுங்கள். (முதல்வரே இப்பதிவை படிக்க வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. எனினும்..)
ReplyDeleteஆதாரங்களின் சுரங்கமாக இருப்பீர்கள் போல....தலைவணங்குகிறேன்.
mika arumaiyana pathivu...valththukkal
ReplyDeleteபிரபாகரன் படத்தை நீக்கினால் பெரும்பான்மையோரின் ஆதரவு சவுக்குக்கு கிடைக்கும்
ReplyDeleteI am extremely proud of you. I am sure all the young people of this nation are already pissed off with these useless, power & money thirsty politicians. I am sure all of us have to make ourselves ready for another Freedom Movement in this country. Otherwise nothing can save this great nation.
ReplyDeleteதுணிச்சலான பதிவு! மானமும் வீரமும் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு தங்களுடைய பதிவு சிறந்த எடுத்துக்காட்டு.
ReplyDeleteஇவ்வளவு கேவலமான மனுசப்பிறவி கூட இருக்க முடியுமா....???
ReplyDeleteஇனியன் said.. is 10000% True be careful my dear Friend
ReplyDeleteதினமலர்,தினமணி, ஹிந்து போன்ற பாப்பார பத்திரிகைகள் செய்ய தவறியாவைகளை நீங்கள் செய்கிறீர்கள்....வாழ்த்துகள்
ReplyDeleteநெத்தியடி!!!!! ஆனா இவ்ளோ ஆதாரம் குடுத்தாலும் இங்க நடவடிக்கை ஒன்னும் இருக்காதுன்னு நம்பலாம்........ தோழர் சவுக்கு அவர்களுக்கு அணைத்து கேரளா வாழ் உண்மை தமிழர்கள் சார்பாக அதிரி புதிரி வாழ்த்துக்கள்
ReplyDeleteKeep it up சரி........இங்கே பிரபா படம் எதுக்கு?
ReplyDeleteKeep it UP?
ReplyDeleteஉங்கள் சேவை நாட்டுக்கு தேவை
சரி........இங்கே பிரபா படம் எதுக்கு?
அப்பப்பா, எவ்வளவு நுணுக்கமான,
ReplyDeleteஎன்னென்னவோ விவரங்கள்.
எல்லாமே புதிய,மக்கள் அறியாத அரிய செய்திகள்.
தாங்கள் கடந்த பதிவில் எழுதியது போல
மற்ற பத்திரிகைகள் ஏன் குப்பை செய்திகளை மட்டும்
எழுதுகின்றன? அவர்கள் இதை அறியவில்லையா?
விலை போகிறார்களா? அல்லது விவர அறிவு அவ்வளவு தானா?
நாம் இந்த போலி பத்திரிக்கைகளை புறம் தள்ள வேண்டும்.
ஜாபரால்IPS கலைஞருக்கே தெரியாமல்
இத்தனை காலம் இவ்வளவு செய்திருக்க முடியும்
என்று நீங்கள் முழுமையாய் நினைக்கிறீர்களா?
இவ்வளவு ஊழலும் கலைஞருக்குத் தெரியாமலா நடந்தது ????
ReplyDeleteஉடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தன் இனத்தின் மீது மனிதாபிமானம் இல்லாதவருக்கெல்லாம் எதற்கு காவல் துறையில் உயர் பதவி.
மிகவும் துணிச்சலான பதிவு. மலைக்க வைக்கும் ஆதாரங்களுடன் தாங்கள் விளக்கியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஆனால் கருணாநிதியைப் பற்றிக் குறிப்பிடும் வரிகள் ("ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில்") கொச்சையாக இருக்கிறது. தவிர்த்திருக்கலாம். நன்றி.
//ஒரு தீய சக்தியை பற்றி இன்னொரு தீய சக்தியிடம் புகார் கூறுவது சரி என்று எனக்கு படவில்லை.// தோழரே மிகவும் கவனமாக இருங்கள். பெரிய திருடனைப் பற்றி எழுதி விட்டீர்கள். ஆட்டோ வரப்போகிறது (இப்பெல்லாம் சுமோதான் வரும்). கிண்டல் பண்ண வில்லை. உண்மையாக சொல்கிறேன் - கவனமாக இருங்கள்
ReplyDeleteகட்டுரை பிரமாதம். ஆனால் இவை முதல்வர் பார்வைக்கு செல்ல வேண்டுமே? பிரபாகரன் படம் இருப்பதற்கு நான் சந்தோசபடுகிறேன். நன்றி
ReplyDeleteஜாபர் என்ற அயோக்கிய மனிதடம் சிக்கிக் கொண்டு, அவர் போடும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டுத் திரியும் பத்திரிகையாள நேர்மையாளர்களுக்கு மத்தியில், உங்களின் துணிச்சல் ரொம்பவும் பாராட்டுக்கு உரியது. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்றெல்லாம் சொல்லிக் கொண்டு திரியும் ஆண்மையில்லா பத்திரிகையாளர்களல்லவா இந்த மாதிரி பதிவுகளை எழுத வேண்டும்? அது சரி, நாடித் துடிப்புத்தான் அடங்கிப் போய் எத்தனையோ காலமாகி விட்டதே. கோவையிலும் சென்னையிலுமாக திருவண்ணாமலை, தைலாபுரத்துக்காரர்களிடம் வாங்கிக் குவித்தச் சொத்துக்கள் போல ஜாபரிடமும் அவர்கள் சொத்துக்களை வாங்கிக் குவித்திருந்தால், ஜாபருக்கு ஆதரவாக வேண்டுமானால் எழுதுவார்கள். அதுவும் இந்த வாரம் தாங்கள் வீராதி வீரர் சூராதி சூரர் போல எழுதிவிட்டு அடுத்த இதழுக்கே, அவர் காலைக் கழுவி குடிப்பது போல மறுப்புப் போடும் வெட்கம் கெட்டவர்களை வைத்துக் கொண்டுதான் நாடித்துடிப்பு, .....துடிப்பு என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களையெல்லாம் இந்த நாட்டை விட்டுத் துரத்துவதற்கல்லவா சவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்? முதல்வருக்கும் நன்றாகத் தெரியும் இந்த மொள்ளமாரிகள் பற்றி. ஆனால், யோக்கியம் போல எதையாவது செய்வார்கள். கருணாவிடமும் ராஜபக்ஷேவிடமும் எல்லாத்தையும் பெற்றுக் கொண்டு காட்டிக் கொடுத்த பாப்பாரப் பத்திரிகைகளை நாட்டை விட்டே துரத்த வேண்டும். மற்றபடி, உங்கள் தீரமான பதிவுக்கு எங்கள் வாழ்த்துக்கள். தொடருங்கள். பத்திரிகையாள நாதரிகளின் முகங்களை கிழியுங்கள். கலைஞர், ஜாபரையெல்லாம் விட பத்திரிகையாளர்கள்தான் இந்த சமூகத்தில் மோசமானவர்கள். எத்தகைய கீழ்த்தரமான செயலையும் செய்து, பிழைப்பார்கள். காசு என்றால், யாரையும் காட்டியும் கொடுப்பார்கள்... ....ம் கொடுப்பார்கள். இத்தகைய ஈனப் பிறவிகளை சமுதாயத்தில் நடமாட விடாதீர்கள். நீங்கள் தோலுரிக்கும் நாளுக்காக காத்திருக்கிறோம். அடிச்சு நொறுக்குங்க. முகமுடியை கிழிங்க. வாழ்த்துக்கள்.
ReplyDelete>துணிச்சலான பதிவு! மானமும் வீரமும் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறார்கள் என்பதற்கு தங்களுடைய பதிவு சிறந்த எடுத்துக்காட்டு<
ReplyDeleteRepeat.. and Saluting your bravery
good job. clean police blood
ReplyDeleteparattai.......
ReplyDeleteகலைஞரை ஏதோ நல்லவர் போலவும் ஜாபரை மட்டும் அயோக்கியர் போலவும் நீங்கள் சொல்ல வந்திருப்பது, நியாயமாகப் படவில்லை. அதற்கான உள் அர்த்தம் எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், கருணாநிதி குடும்பம் இந்தத் தமிழகத்தை ஆள வந்ததற்குப் பிறகுதான் அத்தனை கேடு கெட்டத் தனங்களும் நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே, பெரிய சகுணியிடம் போய் சின்ன சகுணி பற்றிச் சொல்லி நியாயம் கேட்க முற்பட்டிருக்கிறீர்கள். தமிழ் உணர்வு உங்களுக்கு இருப்பதை நினைத்து நாங்களும் வியக்கிறோம். சமூக அக்கறையும் அசாத்திய துணிச்சலும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால், இந்த ஜாபர் மாதிரி மொள்ள மாரிகளெல்லாம் எதையும் செய்யத் துணிகிறவர்கள். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தொடர்ந்து இவர்களின் தோல்களை உரியுங்கள். சப்-அர்பன் என்று சொல்கிறார்களே, அங்கு ஒரு மீசையை ஒட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறதே, கிடா ஒன்று. அது ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு சம்பாதித்திருக்கிறது தெரியுமா? மணப்பாக்கத்திற்குப் போய் பாருங்கள் ஐந்து கோடிக்கும் அதிகமான ரூபாய்களை செலவு செய்து இரண்டரை கிரவுண்டில் பிரமாண்ட பங்களா கட்டியிருக்கிறது. இதனை சுட்டிக் காட்டியதற்காகத்தான் தமிழர் சேனை அமைப்பின் நிறுவனத் தலைவர் நகைமுகனை(இவரும் ஒரு பிளாக் மெயிலர்தான்) கைது செய்து சிறையில் அடைத்தது அந்த போலி மீசை. ஆ... ஊ...ன்னா துப்பாக்கியை எடுத்து சுழற்ற ஆரம்பித்து விடும். எவனாவது ஒரு போலீஸ்காரனை விட்டு எவனையாவது அப்பாவியை பிடிச்சுகிட்டு வந்து சுட்டுபுட்டு, போலி மீசையை வருடி, பத்திரிகையாளர்களிட்ட புருடா விடும். ஐஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் பத்திரிகையாளர்களும் மீசை போடும் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு, மீசை விடும் புருடாக்களை பத்தி பத்தியாக எழுதுவார்கள். நீங்களாவது மீசையை பிடிச்சு இழுத்து அருவாமனையை வைத்து அறுத்து எரியுங்கள். உங்கள் ஒருவருக்கு மட்டும்தான் அப்படியொரு ஆண்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். பத்து பிள்ளைகளை பெத்துகிட்டா மட்டும் ஆண்மை என்று சொல்வது அபத்தம். இத மாதிரி சமூகத்தின் எதிரிகளை தோலுரிப்பதுதான் ஆண்மைத்தனம். இந்த மாதிரி பொட்டைங்களை உங்களைப் போன்றவர்கள்தான் அடையாளம் காட்ட முடியும். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய செய்ங்க. ஒண்ணே ஒண்ணு, உங்களையும் இந்த பொட்டைங்க, பத்திரிகையாள நாய்ங்களை விட்டு பேரம் பேசி வளைக்கப் பார்ப்பாங்க. இதுக்குப் பிறகும் நீங்களும் விலை போனீங்கன்னா... ஒண்ணும் செய்ய முடியாது. தர்மம் அவ்வளவுதான். செத்துப் போகும்.
ReplyDeleteSankar,
ReplyDeleteWe are worried about your well being.Always move in a crowd and maake sure your telephones are not tapped. Try to look for suspicious characters outside your home etc
All Tamils feel bad about killing of Tamil lives in Srilanka. But for wider acceptance of your portal pleas minimize the photo of LTTE leader and put it elsewhere in a small image.
How about investigating spectrum and ETA Star medical insurance scandal
yow vennai; jaafer mel irukkum kobathil un iyalbai yaen tholaithai? avar aatchikku naal kurithuvittu avar kudumbathaiye totalaa damage pannivittu periya dhairiyasaali endru naangal unnai paarattum nerathil...very sorry
ReplyDeleteநீங்கள் தமிழகத்தின் கிடைபதற்க்கரிய சொத்து
ReplyDeleteஉங்கள் துணிவே உங்கள் வலிமை -ஆனால்
உங்கள் பாதுகாப்பே எங்கள் வலிமை
உங்களுக்காக இல்லாவிட்டாலும் எங்களுக்காக
கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள்
நாம் களைந்தெடுக்க வேண்டிய களைகள் இங்கே ஏராளம்
I like all your posts. but be careful with our dirty politicians, anything can be happen at any time. So look at your every step against the criminals.
ReplyDeleteSend all the doucments to Chennai High court too, if they will, they can take action on their own, Is it possible? Mr. Pugazhenthi may suggest.
VIDEO SUBRAMANIAM <TIRUPPUR. SUPPORT PANNA YARUM ILLA SAVUKKU AVARAI KONJAM PAKKANUMAY....
ReplyDeleteTTUT77TITIVBRYY
ReplyDeleteநிறைய பேர் பெயரில்லாமல் பின்னோட்டம் இடுவதிலிருந்து தெரிகிறது. பயப்படுகிறார்கள் என்று...எதற்கு வம்பு என்று ஒதுங்கி கொள்கிறார்கள்....சவுக்கு போன்ற சாட்டைகள் இன்னும் வேண்டும் தமிழகத்திற்கு....குமுதம் போன்ற பத்திரிகைகள் கூட சவுக்கு பற்றி இரண்டு வரிகள் போட தயங்குகின்றன...
ReplyDeleteஉங்கள் தைரியத்திற்கு எனது பாராட்டுகள் ! !
இந்தியன் படத்தில் வருவது போல் பொது மக்களும் சவுக்கு பணியை போற்றி பாராட்டி வாழ்த்த தயார் என்றே நினைக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
சிறிய வேண்டுகோள்: தயவு செய்து பிரபா படத்தை சிறிதாக்கி வால் பேப்பரை மாற்றி வடிவமைக்கவும் .
இது ஒண்ணுதான்யா பத்திரிகை... மத்தவன் எல்லாம் அல்லக்கை.
ReplyDeleteதுணிச்சலுக்கு தலை வணங்குகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை. பல புரட்சிகளின் வித்தாக இது அமையட்டும்.
சவுக்கு தளம் பற்றியும் அது வெளியிட்ட ஆதாரங்கள் குறித்தும் மக்களிடம் ஓ பக்கங்கள் மூலமாக ஞானி எழுத முற்பட்டபோது ,ஞானிக்கும் குமுதம் நிர்வாகத்திற்க்கும் பிரச்ச்னை ஏற்பட்டுள்ளது.இதை எழுதக்கூடாது ,தமிழக முதல்வருக்கு பிரச்ச்னை வரும் எதையும் ஓ பக்கங்களில் எழுதக்கூடாது என குமுதம் நிர்பந்த்திதிருக்கிறது.இதனால் ஞானி வெளியேறிவிட்டார்.சவுக்கின் ஆதாரங்கள் மறுக்க முடியாதவை.ஆனால் முக்கிய பத்திரிக்கைகள்,பெரிய பத்திரிக்கைகள் அனைத்தும் தமிழகத்தில் முடக்கப்பட்டு விட்டன.சினிமா செய்திகள் மாத்திரம் வாசிக்க இயலும்.சவுக்கு தன் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ReplyDeletesavukku,u r taking side of dalits and trying to make racial riots in tamilnadu.it is obvious and proved in your article.caste fanaticism is not good for you and your 'gang'.umasankar is an able and honest administrator.it is widely accepted by all.but the acceptance and respect is not based on his caste.if you are a dalit or pro-dalit,boldly declare it.it is not at all an issue.because we should not get ashamed of disclosing our caste.caste matters nothing.but trying to stimulate and provoke people by hailing (a) caste(s) is a criminal offence.you know it better than us.
ReplyDeletethen dont attempt to divert attention by using the name of our ONE & ONLY PURE TAMIL LEADER-THE MAN OF REAL VALOUR PRABHAKARAN.YOU ARE ALWAYS BIASED BIASED BIASED.declare your "real inner" expectations boldly and deleborately.instead,dont mask yourself as a social rebel or revolutioner or reformer.
anyway,all the best for your "real" expectations!
மிக சிறப்பன பதிவுகள். நன்றி நன்றி நன்றி. இனவிரோதிகளை தொடர்ந்து அடையாளப்படுத்துங்கள்.
ReplyDeleteYou are truly one hell of a brave guy.. your blog is being noticed by a lot of higher officials and VVIP politicians.. I can definitely say this as i have seen the proof.. Do not ask me how but this corrupted IG is gonna be sacked soon.. i got this info from a reliable source... Whatever happens please do not stop writing !
ReplyDeleteJAIHIND !!
அன்பார்ந்த சவுக்கு, இன்றைக்கு நான் ஒரு விஷயத்தைக் கேள்விபட்டேன். அப்படியே புல்லரித்துப் போய்விட்டேன். நியாயத்தையும் ஒழுக்கத்தைப் பற்றி கொஞ்சமாவது சமூகத்துக்கு சொல்ல வேண்டும் என்று நினைக்கும் உங்களோடு அந்த விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பியே இந்த பதிவை எழுதுகிறேன். அனேகமாக இதனையும் கருத்துப் பதிவு இடத்தில் வெளியிட்டு அதனை சவுக்கு வாசகர்களுக்குக் கொண்டு சென்றீர்களானால், நல்ல உள்ளங்கள் பலர் வாழ்த்துவார்கள்.
ReplyDeleteஜாபர் சேட் போன்ற மோசடி போலீஸ் அதிகாரிகளும் கர்ம வீரர் காமராஜர் பெயரில் மோசடியாக வாழ்த்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களும் வாழும் நாட்டில்தான், நேர்மையான அப்பழுக்கற்ற ஒழுக்கமான அதிகாரியான நரேஷ் குப்தாவும் இருக்கிறார். அவர் இன்றோடு ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெறும் நாளில் அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பத்திரிகையாளர்களிடம்(அதற்கு துளியும் தகுதியில்லாதவர்கள்தான்) அன்னியோன்யமாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். பத்திரிகையாளர்களுக்கு அப்போது டீ, ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்தார்களாம். சந்திப்பு முடிந்ததும், செய்தி மக்கள் தொடர்புத் துறையினரைத் தொடர்பு கொண்ட நரேஷ்குப்தா, நேற்று வரையில் நான் அரசு அதிகாரி. அரசு சார்பில் செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்புக்காக நடந்த செலவுகளையெல்லாம், அரசு ஏற்றுக் கொண்டது சரி. இன்றோடு நான் ஓய்வு பெறுகிறேன். அது நான் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஏற்பாடுச் எய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு. அதனால், அது என் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. அந்த சந்திப்புக்காக அரசு பணத்தை எக்காரணம் கொண்டும் செல்வு கூடது. செலவழிக்கப்பட்ட பணத்தை நானே கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லி, தன் காசை எடுத்துக் கொடுத்தாராம். இந்த மாதிரியான புனித ஆத்மாக்களெல்லாம் வாழும் நாட்டில்தான் நாமும் வாழ்கிறோம். அயோக்கிய ஜாபர் சேட், காமராசரு ஆகியோரெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் இந்த நாட்டில் பிறந்ததற்காக பெருமை. இன்னொரு புறம் கொடுமை. இவர்களுக்கெல்லாம் பெருந்தலைவர் காமராஜர் பெயர் ஒரு கேடு. மனசுல தோன்ரியது. எழுதி விட்டேன். என்று விடியும் என்று பார்ப்போம்.
Savukku,
ReplyDeletePlease take care of your safety.You need to live for another 75 years to expose the evils.
I also feel thic can be a movement and you can hold alliance with RTI activists.
Also please hand over expose to Times Now,headlines today,CNN IBN etc for a national level awareness
Dear Bro savukku...
ReplyDeleteGreat job but today u had given too much respect to CM,compare to other articles.In the meantime u are counting the last day of karunanithi's period.
Simply super.continue ur services we are all here to support you...
செவிடன் காதில் சங்கு ஊதுகிறீர்கள்
ReplyDeletesavukku neengal aammagan
ReplyDeleteஜாபார் சேட் போல இன துரோகிகளை பக்கத்தில் வைத்துக் கொண்டு தூரத்தில் இருக்கிற ராஜபக்செவையும் ,கருணாவையும் திட்டிக் கொண்டிருக்கிறோம்..
ReplyDeleteசின்ன திருடனை பெரிய திருடனிடம் காட்டி கொடுக்கிறிர்கள்... பார்ப்போம், பெரிய திருடனுக்கு கோவம் வருகிறதா என்று..
சவுக்கு , இணையத்தில் உங்கள் கருத்துக்கள் பலரை சென்றடைந்தாலும் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் .
ReplyDeleteஒரு சிறு பத்திரிக்கை மூலம் தமிழகத்தின் மூலை மூடுக்கெல்லாம் இதைப் பரவச் செய்யலாம் . நக்கீரன் கோபால் சோரம் போய்விட்டார் .
உங்களைப்போல சில பேர் முன்வந்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் .
வாழ்த்துக்கள்
savukku pathrikaigal paapaan kaiyil irupadhaal pala seidhigal namakku theriyaamale poi vittana ivai ellam andhandha nerathileya velipattirundhaal... makkalai iruttil vaithu vittu indha naaigal nam panathai kodi kanakkil amukkivittu pasikku thirudubavanai pidithukondu photovirku pose kodukiraargal.boss neengal oru pulanaaivu idhazh thodangungal.
ReplyDeleteஇங்கே பிரபா படம் எதற்கு என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ் மக்கள் உரிமை கழகம் என்ற இணையத்தில் தமிழின தலைவர் படத்தை தான் போடா வேண்டும் பின்னே கருணாநிதி படத்தையா போடவேண்டும்? வாழ்த்துகள் சவுகுக்கு
ReplyDelete