Friday, November 13, 2009

கடும் நெருக்கடியில் கருணாநிதி… ….



கடந்த 10 நாட்களாக, இலங்கை அகதிகள் மேல், கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள “திடீர்“ அக்கறை குறித்து, பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

1983ல் இலங்கையில் வெடித்த இனக் கலவரம் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழ் நாட்டுக்கு வரத் தொடங்கினர். 2003 செப்டம்பருக்குப் பிறகு அகதிகளின் வருகை சற்றே நின்றிருந்தது. 31.1.2005 நிலவரப்படி தமிழகத்தில் ஈழத்தமிழ் அகதிகளுக்கென 103 அகதி முகாம்கள் உள்ளன. அவற்றுள் இரண்டு சிறப்பு முகாம்களாகும். மொத்தம் 14,031 குடும்பங்களைச் சோந்த 52,322 பேர் இந்த முகாம்களில் தங்கியிருந்தனர்.


18.06.2006 நாளிட்ட “ஆனந்த விகடன்“ இதழுக்காக, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை பற்றி, விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமார் எழுதிய கட்டுரை கடைகளில் வெளிவரும் முன்பே, அதிகாலையில் அதைப் படித்து விட்டு, ரவிக்குமாரை தொலைபேசியில் அழைத்து, நீங்களே முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்தி ஒரு அறிக்கை தாருங்களேன் என்று கூறினாராம். மு.க.ஸ்டாலின், தயாளு அம்மாளை விட தற்போது, கருணாநிதிக்கு விசுவாசமாக மாறி இருக்கும் ரவிக்குமார், அனைத்து முகாம்களையும் சென்று பார்த்து விட்டு அறிக்கை கொடுத்தாராம்.



இதில் ரவிக்குமாருக்கு இலங்கை அகதிகள் மேல் உள்ள அக்கறை விவாதப் பொருளல்ல. ஆனால், “பனங்காட்டு நரி“யான கருணாநிதி ரவிக்குமாரை தொலைபேசியில் அழைத்து, அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது அகதிகள் மேல் உள்ள அக்கறையால் அல்ல. அப்போது, அதிமுக அணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகளை, திமுக வளையத்துக்குள் சிக்க வைக்க வேண்டும் என்ற திட்டம் தான் காரணம். அதன்படியே, அந்த வளையத்தில் சிக்கி, இன்று வெளியே வரமுடியாமல், திருமாவளவனும், ரவிக்குமாரும், மானம், மரியாதை இழந்து, “திருவிழாக் கூட்டத்தில் நிர்வாணப் படுத்தப் படுவதை விட“ மோசமான அவமானத்துக்கு உள்ளாகியும், கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருப்பது “பதவி படுத்தும் பாடு“.

ஆனால், கருணாநிதிக்கு “திடீரென“ இலங்கை அகதிகள் மேல் ஏன் இந்த அக்கறை ? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை ? என்பதை ஆராய்கையில் தான், கருணாநிதியின் நயவஞ்சகமும், தணியாத “ஈகோவும்“ இன்று இலங்கை தமிழ் அகதிகளின் மேல் உள்ள பாசமாக வெளிவருகிறது என்பது தெரியும்.

ஈழத்தில் தமிழர்கள், ஈசல்களைப் போல, சிங்கள வெறியர்களின் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருந்த போது, கண்துடைப்பு நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தவர்தான் இந்தக் கருணாநிதி என்பதை உலகத் தமிழர்கள் அறிய மாட்டார்களா ?

தமிழினத் தலைவன், நான்தான் தமிழ், தமிழ்தான் என் மூச்சு என்று “முரசொலியில்“ கடிதம் எழுதினால், கருணாநிதியின் உடன்பிறப்புகளே நம்புவதில்லை. உலகத் தமிழர்களா நம்பப் போகிறார்கள் ?

கருணாநிதியின் தமிழினத் துரோகத்தையும், நயவஞ்சகத்தையும், உலகத் தமிழினத்தைத் தவிர மிக நன்றாக அறிந்தவர், அவரோடு ஏறக்குறைய ஐம்பதாண்டுகளாக கூடவே இருக்கும் “பேராசிரியர் அன்பழகன்“. ஆனால், அவர் வாயைத் திறக்கக் கூடாது என்பதற்காகத் தான் கருணாநிதி, அவருக்கு எப்போதும், வெற்றிலையும் சீவலையும் வாங்கி வாயில் அடைத்துள்ளார்.


கருணாநிதியின் தணியாத “ஈகோ“ வை அமைதிப் படுத்தவும், தன் கரங்களில் வீசும் பிண வாடையை அகற்றவும், தன்மேல் படிந்திருக்கும், ஈழத் தமிழரின் ரத்தத்தை துடைக்கவும் விரும்பித்தான் கருணாநிதி “உலகத் தமிழ் மாநாடு“ நடத்தத் திட்டமிட்டுள்ளார்.


ஆனால் இந்த உலகத் தமிழ் மாநாடு நடத்த கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே, கடும் எதிர்ப்புகள் கிளம்பியபடித்தான் உள்ளன. உலகெங்கம் உள்ள தமிழர்கள் ஈழத்தில் முள்வேலிக்குள் தமிழர்களை அடைத்து வைத்து விட்டும், ஆயிரக்கணக்கான தமிழர்களை சிங்களக் காடையர்களின் கொத்துக் குண்டுகளுக்கு இரையாக்கி விட்டும் ரத்த வாடை போவதற்குள், இந்த “உலகத் தமிழ் மாநாட்டுக்கு“ என்ன அவசியம் என்ற கடும் விமர்சனங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.


இந்த விமர்சனங்கள் கருணாநிதிக்கு இருக்கும், 0.00002 சதவிகித மனசாட்சியை குத்துவதால், இங்கிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு சலுகைகளை அள்ளி வீசுகிறார்.


10 நாட்களுக்கு முன், இந்தியா டுடே வார இதழ் அகதிகள் முகாமில் அவல நிலை பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இதைப் பார்த்தவுடன், மிகவும் மனம் வருந்திய கருணாநிதி, உடனடியாக தமிழகம் முழுவதும், தனது அமைச்சர் மற்றும் பரிவாரங்களை முகாம்களை பார்த்து ஆய்வு நடத்தச் சொன்னார்.


சரி, இது வரை கருணாநிதியும், அவரது அமைச்சர் பரிவாரங்களும், மெச்சிகோ நாட்டிலா இருந்தார்கள் ? தமிழகத்தில் அகதிகளின் அவல நிலை என்ன என்பது தெரியாதா ? இதற்கு 15 நாட்களுக்கு முன்பு கூட, செங்கல்பட்டு, பூந்தமல்லி வதை முகாம்களை இழுத்து மூடு என்று தலைமைச் செயலகம் முன்பு மறியல் நடந்தே… கருணாநிதிக்கு தெரியாதா ? மறியல் செய்தவர்களை, மாலையில் விடாமல், ரிமாண்ட் செய்து புழல் சிறைக்கு அனுப்ப மட்டும் கருணாநிதிக்குத் தெரிகிறதா ? யாரை ஏமாற்ற இந்த நாடகம் ?


ரவிக்குமார் எம்எல்ஏ, 04.07.2006 அன்று, முகாம்களை பார்வையிட்டு தனது அறிக்கையில் 33 பரிந்துரைகளை செய்திருந்தோரே ? அதை மூன்று ஆண்டுகளாக கருணாநிதி ஏன் செயல்படுத்தவில்லை ? ஏனெனில், விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணி மாறுவதற்காக மட்டுமே, அந்த நாடகத்தை அப்போது அரங்கேற்றினார் கருணாநிதி. காரியம் முடிந்து விட்டதல்லவா ? வசதியாக மறந்து விட்டார்.


இப்போது தமிழர்கள் கொல்லப் படுகையில், உன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எங்களை பழி கொடுத்தாயே என்று ஊரே தூற்றுகிறதல்லவா ?


அரசியல் பிழைத்தோர்க்கு
அறங் கூற்றாவதூ உம்

ஊழ்வினை உருத்து வந்து
ஊட்டும் என்பதூ ஊம்….


என்று சிலப்பதிகாரம் கூறுகிறதல்லவா ? தமிழ் படித்த அறிஞராயிற்றே கருணாநிதி. அதற்காகத்தான், இலங்கை அகதிகளுக்கு நிதியை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இலங்கை தமிழர்களுக்கு எவ்வளவு நிதி வழங்கினாலும், ஈழம் சுடுகாடான போது வாளாயிருந்த உமக்கு “அறமே கூற்றாகும்“.

சவுக்கு

9 comments:

  1. only tamils leder is pirabakeran

    ReplyDelete
  2. Also read this blog

    tamil-eelam-discussions.blogspot.com

    tamil-eelam-lanka.blogspot.com

    ReplyDelete
  3. அவருக்கு தன குடும்ப அரசியலைப் பார்க்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே அவர் இலங்கை தமிழரைப் பார்ப்பார். எல்லாம் அப்பட்டமான நாடகம்.

    ReplyDelete
  4. கருணாநிதியை விட்டால் வேறு நாதி தமிழனுக்கு உண்டோ?! எருமைத் தமிழன்!

    ReplyDelete
  5. Enna seithalum athukku oru comments.Nai thamilargaley.

    ReplyDelete
  6. அட சும்பன்களா,

    அடங்க மாட்டீங்களாடா

    ReplyDelete
  7. பிரியாணி பொட்டலத்த பட்டியல்ல காணும் ... அல்ல கயிங்க அடிசிடானுங்களா

    ReplyDelete